எடப்பாடியாரின் கட் அவுட் தர்பார்!

பதவி கொடுத்த சசிகலாவையே புறந்தள்ளி விட்டு ஆட்சியையும் கட்சியையும் தன் பக்கம் தக்க வைக்க முயல்கிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்து அவர் சிறை செல்வதற்கு முன்னால் அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அணியினர் இப்போது தினகரன் அணியினரை பெருந்தொகைக்கு இழுத்து வருகிறார்கள். இந்த பேரங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் ஒரு முதல்வராக தமிழக மக்களின் உரிமைகள் மொத்தத்தையும் பறி கொடுத்து நிற்கிறார் எடப்பாடியார். இன்று நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அவருக்கு வருவாய்த்துறை ஊழியர்கள் காட்டிய எதிர்ப்பு அதையேக் காட்டுகிறது.

நீட் தேர்வு விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவே தாமதித்து இன்று மருத்துக் கல்வி சேர்க்கையே கேள்விக்குள்ளாகி நிற்கிறது. நீட் என்னும் அநீதியான தேர்வு முறை மாணவர்களின் விருப்பத்தையும் மீறி திணிக்கப்பட்டிருக்கும் நிலையில் எது பற்றியும் கவலைப்படாமல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சால்வைகளைப் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார். அவர் செல்லும் இடங்களில் இதுவரை சின்ன அளவில் தான் போஸ்டர்கள் விளம்பரங்கள் இருந்தது. இப்போது ஜெயலலிதாவுக்கு இணையாக எடப்பாடியார் எட்டிச் சிரிக்கிறார். இனி நாளை எடப்பாடியார் அருகில் ஜெயலலிதா படம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*