கிராம ஊழியர் எதிர்ப்பால் பாதியில் முடிந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விழாக்களில் பங்கேற்று வரும் நிலையில் தமிழக வருவாய்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடந்தது. வருவாய்துறை நடத்திய விழா என்பதால் வருவாய்துறை அமைச்சர் உதயகுமர் உள்ளிட்ட அதிகாரிகளும் வருவாய்துறை ஊழியர்களும் அதிகமாக கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த போது திடீரென ஊதிய உயர்வு கோரியும் அறிவிக்கப்பட்ட சலுகைகளை வழங்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை அமைச்சர் சமாதானம் செய்ய முயல அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் இருந்து வெளியேறினர்.
கிராம வருவாய் உதவியாளர்கள் என்ற நிலையில் உள்ள இந்த ஊழியர்களின் எதிர்ப்பால் முதல்வர் கலந்து கொண்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பாதில் முடிந்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*