தமிழகத்தையே கலக்கும் ரியல் எஸ்டேட் பாகுபலி #Video

“சென்னைக்கு மிக அருகில்” என்று  துவங்கி இதோ இதோ என்று விழுப்புரம் வரை கூட்டிக்கொண்டு போய் விட்டுவிடுவார்கள். சொந்த வீடு வாங்க வேண்டுமென்ற கனவில் வாழும் நடுத்தர  மக்களை பலிகிடாவாக்கி ஒரு கிரவுண்டு நிலத்தை ஆசைகாட்டி லட்சக்கணக்கில் விற்று சம்பாதித்து விடுவார்கள் இந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள்.

இது இப்போது நாடுமுழுக்க பெருமளவில் வளர்ந்து வரும் வியாபாரமாகும். கடந்த சில வருடங்களில் மட்டும் பல தொழிலதிபர்கள் லட்சக்கணக்கிலும் சிலர் கோடிக்கணக்கிலும் இந்த வியாபாரத்தில் பயனடைந்துள்ளனர். தற்போது பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வந்துவிட்டதால் வியாபாரம் சற்றே நலிவடைந்தாலும் ஆரம்பத்திலிருந்து மக்களிடையே நற்பெயர் வாங்கிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அதிபர்களும் இன்றுவரை தொழிலில் நிலைத்துநின்று வருகின்றனர்.

[சர்ப்ரைசாக வெளியாகிய #விவேகம் #ட்ரெய்லர்]

இந்நிலையில் தமிழகத்தின் பாகுபலி ‘ரியல் எஸ்டேட் ராம்’ என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலில் மிகப்பெரிய அளவு எதோ சாதனை புரிந்ததற்காக மாபெரும் விழா ஒன்று அவருக்காக ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வாட்சப்பில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் ரியல் எஸ்டேட் ராம் கருப்புகலர் கூலிங்கிளாஸ், கைகள் மற்றும் கழுத்துகளில் தங்க ஆபரணங்களுடன் தனது மனைவியுடன் மேடையில் அமர்ந்திருக்க அவருக்கு மிகப்பெரிய அளவு ப்ளெக்ஸ் வைக்கப்பட்டு பலர் முன்னிலையில் படைத்தலைவர்கள் போல உடையணிந்த ஒரு குழு வந்து அவரின் முன்பு அடிபணிந்து நிற்க பெண்மணி ஒருவர் மேடையேறி தங்கத்தாலான கிரீடத்தினை ராமின் மனைவியிடம் கொடுக்கிறார்.

[குழந்தைகள் மரணம்: எண்ணிக்கை குறைவு என்கிறார் மத்திய விசாரணைக் குழு மருத்துவர்]

கிரீடத்தை வாங்கிய மனைவி ராமை பார்த்து ‘கண்ணாடியை கழட்டுங்க மாமா’ என்று கூறி கிரீடத்தை அணிவிக்க, புன்சிரிப்புடன் ராம் அதனை ஏற்றுக்கொள்ள பாகுபலி அரியணை ஏறும் பின்னணியிசை ஒலிபெருக்கிகளில் ஒலிக்க மீண்டு அவர் மீண்டும் ஸ்டைலாக கூலிங்கிளாஸ் அணிய மக்கள் கரகோஷம் செய்கின்றனர். அதன் பின்னர் மற்றோரு பெண்மணி ஒரு தாம்பூலத் தட்டில் எதையோ எடுத்துக் கொண்டு வருகிறார். அதில் உரையுடன் கூடிய ஒரு வாள் இருக்கிறது. உடனே ராம் அந்த வாளை கையிலெடுக்க மக்களிடையே ஆரவாரம் உண்டாகிறது. உடனே உரையிலிருந்து அந்த வாளை உருவுகிறார் அதிபர் ராம். அது ஒரு தங்க வாள். உடனே முகம் முழுக்க சிரிப்புடன் மாபெரும் சாம்ராஜ்யத்தை வென்ற வெற்றிக்களிப்புடனும் ‘பாகுபலி ராம்’ மக்களை நோக்கி ‘வெற்றி நமதே’ என்று கூற அந்த வீடியோ நிறைவு பெறுகிறது.
[#BlueWhaleSuicideGame மூலமாகத்தான் எனது மகன் இறந்தான் – ஒரு பெண்ணின் கண்ணீர் #Video]

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*