தினகரனிடமிருந்து திடீரென விலகிய எம்.எல்.ஏக்கள் : அதிர்ச்சியில் டிடிவி!

புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர், திடீரென, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவரது அணியில் இணைந்தனர்.

டிடிவி தினகரனை கட்சியிலிருந்து எடப்பாடி அணியினர் கட்சியிலிருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக, தற்போது 3 அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ். அணியில் 11 எம்எல்ஏக்களும், சில எம்பிக்களும் உள்ளனர். டிடிவி தினகரன் அணியில் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். மற்ற எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களால் தமிழக அரசுக்கு எந்நேரமும் குடைச்சல் வரலாம் என்ற நிலைதான் இருக்கிறது. தினகரனை கட்சியிலிருந்து நீக்கியதும் அவர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த 14-ஆம் தேதி மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் அலை மோதியது. இதனால் பதறிய அதிமுகவின் இரு அணியனரும் அதிமுக அணி இணைப்பு விரைவில் நடைபெறும் என்று கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : மைனாரிட்டி ஆனது அதிமுக அரசு!

இந்நிலையில், புதுச்சேரி அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன், வையாபுரி, பாஸ்கரன், அசனா ஆகியோர் இதுநாள் வரை சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது, புதுவை அருகே, எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி, பாஸ்கரன் ஆகியோர், எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து, அவரது அணியில் இணைந்து கொண்டனர். புதுச்சேரி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் சிறப்பான வரவேற்பும் அளித்தனர். தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீரென பழனிசாமி அணிக்கு தாவியிருப்பதால் தினகரன் அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியை பயன்படுத்தியும், பதவி ஆசையை ஏற்படுத்தியும் எடப்பாடி பழனிசாமி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தனது பக்கம் இழுத்து வருவதாகவும், மேற்கொண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனிசாமி பக்கம் செல்வதை தடுப்பது எப்படி என்பது குறித்தும் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத படிச்சிங்களா : ’ஜெ’ சந்தேக மரணம் : கத்தியை ஓ.பி.எஸ் பக்கம் திருப்பிய தினகரன்

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*