நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

School Staff checking the applicants before entering for NEET Exam at Ajit Karam Singh International School in Sector 41 of Chandigarh on Sunday, July 24 2016. Express Photo by Kamleshwar Singh *** Local Caption *** School Staff checking the applicants before entering for NEET Exam at Ajit Karam Singh International School in Sector 41 of Chandigarh on Sunday, July 24 2016. Express Photo by Kamleshwar Singh
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை தமிழகத்தில் நடத்துவதில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் சிபிஎஸ்சி மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் நீதிமன்றம்  தமிழகத்தின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடையாது என்று மத்திய அரசு மறுத்து வந்த நிலையில் தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியது. அதிமுக அமைச்சர்கள் மத்திய அரசிடம் விலக்கு கோரி விண்ணப்பித்த நிலையில் அவசரச் சட்டத்தின் கொண்டு வந்தால் ஓராண்டுக்கு விலக்கு என்றது.
அதையொட்டி தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு ஓராண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழக அரசு. அதாவது நீட் தேர்வுக்கு எங்களை தகுதிப்படுத்திக் கொள்ள ஓராண்டு அவகாசம் வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கோரிக்கை. நீட் தேர்வு என்பது உயர்வான ஒன்று நாங்கள் அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதுதான் தமிழக மருத்து மாணவர்கள் பற்றிய தமிழக அரசின் மதிப்பீடாக இருக்கிறது. நிற்க ஒரு வழியாக ஓராண்டு நீடிப்பு கிடைத்து விட்டது. ஆனால் இது உச்சநீதிமன்றத்தைக் கடந்து இந்த உத்தரவு செல்லுபடியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுகள்

‘நீட்’ தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. சட்ட அமைச்சகம் அனுமதி அளித்து விட்ட போதிலும் சிபிஎஸ்சி மாணவர்கள் தமிழக அரசின் மசோதாவை எதிர்க்கிறார்கள். அவர்கள் இந்த அவசரச்சட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என நேற்றே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்துள்ள நிலையில் தமிழக அரசின் அவசரச் சட்டம் உச்சநீதிமன்றத்தையும் மீறி வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*