#Response:கேரள முதல்வரும் உ.பி முதல்வரும்!

கேரள மருத்துவமனைகளின் அலட்சியத்தால் உயிரிழந்த தமிழக கூலித்தொழிலாளி முருகன் குடும்பத்திடம் வருத்தம் தெரிவித்த கேரள முதல்வர் இன்று அக்குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் வள்ளியூர் துரைகுடியிருப்பைச் சேர்ந்த 30 வயது இளைஞரான முருகன் என்பவர். கடந்த 6-ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லம் அருகே விபத்தில் சிக்கினார்.படுகாயமடைந்த அவரை ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்ற போதும் எந்த மருத்துவமனையும் சிகிச்சையளிக்க முன்வராமல் தாமதித்த காரணத்தால் பரிதாபமாக முருகன் உயிரிழந்தார்.

சிகிச்சையின்றி இறந்த தமிழர்: கேரள முதல்வர் வருத்தம்…!
இது கேரள மாநிலத்திலும், தமிழகத்திலும் கடும் சர்ச்சைகளை உருவாக்கியது.சுமார் 7 மணி நேரம் உயிருக்குப் போராடியும் அவருக்கு சிகிச்சையளிக்க முன்வராத கேரள அரசு மருத்துவமனைகள் பற்றி கடும் விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. இந்த நிகழ்வால் கவலையடைந்த கேரள முதல்வர் கேரள சட்டமன்றத்தில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டார்.
முருகன் குடும்பத்தின் நிலையோ பரிதாபமானது. முருகனுக்கு இரு குழந்தைகள் ஒரு மகன் 2-ஆம் வகுப்பும், இன்னொரு மகன் எல்.கே.ஜியும் படித்து வரும் நிலையில் ஏழ்மை நிலையில் தள்ளப்பட்டனர். தன் இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு முருகனின் மனைவி நேற்று கேரளம் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.
தங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்த பினராயி விஜயன் ”முருகன் உறவினர்கள் என்னை சந்தித்தார்கள். அவர்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்” என்று சொன்ன பினராயி விஜயன்.இன்று அவசரமாக மந்திரி சபையைக் கூட்டி முருகன் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். இந்த தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு அதிலிருந்து வரும் வட்டியில் முருகன் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வழங்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி மாநிலத்தில் மாடுகளுக்கு 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை இருப்பது உங்களுக்கு தெரியுமா?
இடதுசாரிகள் ஆளும் கேரளத்தின் நிலை இதுவென்றால் பாஜக ஆளும் உத்திரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். உ.பி மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நாட்களில் 60-பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக இறக்க இப்போது வரை பாஜக தலைவர்களும் உத்திரபிரதேச மாநிலத்தை ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அதை மறுத்து வருகிறார்கள். “ஆக்சிஜன் குறைபாட்டால் குழந்தைகள் இறக்கவில்லை மூளை அழற்சி நோயால்தான் குழந்தைகள் இறந்தன” என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள்.
சுகாதாரத்துறையில் இந்தியாவில் தமிழகம், கேரளம் என தென்னிந்திய மாநிலங்கள் இரண்டும் வட இந்திய மாநிலங்களோடு குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தோடு ஒப்பிடும் போது முன்னேறிய மாநிலங்கள். குழந்தை இறப்பு விகிதமும் குறைவு எனும் நிலையில் ஒரு மாநில முதல்வர் தன் மாநிலத்தில் நடந்த மருத்துவ அஜாக்கிரதையை உணர்ந்து அதற்காக வருத்தம் தெரிவிக்கிறார். அந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கிறார். ஆனால் இன்னொரு மாநில முதல்வர் அஜாக்கிரதை நிகழ்வால் 60 குழந்தைகள் இறந்ததையே மறுக்கிறார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் எண்ணிக்கையும் கூட வழக்கமாக இந்த மாதிரி விஷயங்களில் நம்பர் விளையாட்டுகளில்தான் பாஜகவினர் ஈடுபடுவர்கள். அந்த எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் கூட இறந்தது முருகன் மட்டும்தான். ஆனால் உத்திரபிரதேசத்தில் 60-பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள்.
நடந்து விட்ட நிகழ்வுக்கு முதல்வர் பதில் சொல்வது என்பது கரிசனமோ கருணையோ அல்ல அது பொறுப்பு. மாநிலத்திற்கு முதல்வராக இருக்கும் ஒருவர் தன் மாநிலதிற்குள் நடந்த ஒரு நிகழ்வுக்கு பொறுப்பேற்கிறார். இன்னொருவரோ தட்டிக் கழிக்கிறார்.
வெல்டன் பினராயி விஜயன் சார்!

 

தொடர்புடைய பதிவுகள்,

கஃபீல் கான் என்ற பெயர் உறுத்துகிறதா?

குழந்தைகள் மரணம்: எண்ணிக்கை குறைவுதான் என்கிறார் மத்திய விசாரணைக் குழு மருத்துவர்!

கோரக்பூர் குழந்தைகள் மரணத்தின் முழு அவலத்தையும் காண இங்கே க்ளிக்கவும்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*