ஈபிஎஸ் அறிவிப்பு எதிரொலி ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள நிலையில், இன்று காலை 10 மணிக்கு தமது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன்  பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் உயிரிழந்தது வரை மர்மம் நீடிப்பதாக பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டு வந்தது.முக்கியமாக தனது பதவி பறிபோனதும் அதிமுகவை இரண்டாக உடைத்த ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறார். மேலும் இரண்டு அணிகளும் இணைய வேண்டுமெனில்  ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அதனை எடப்பாடி அணியினர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து டிடிவி தினகரனின் செல்வாக்கு கட்சிக்குள் நாளுக்கு நாள் வளர்ந்து செல்வதால் பதற்றமடைந்த பழனிசாமிபன்னீருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். ஆனால் பன்னீர் அணியோ நீண்ட நாட்களாக பிடிகொடுக்க வில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் எனவும், சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் எனவும் பன்னீர் அணி கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையும் படிச்சிருங்க : ஜெ மரணம் நீதி விசாரணை : முதல்வர் அறிக்கை சொல்வது என்ன?

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும்,  ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு ஒபிஎஸ் தரப்பினர் பெரிதும் வரவேற்பு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று  காலை 10 மணிக்கு தமது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் இரு அணிகளின் இணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென்று தெரிகிறது. முக்கியமாக பதவி பங்கீடுகள் குறித்தும் விவாதிக்கப்படலாமென்று கூறப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*