தோல்விகளை மறைக்க மீண்டும் ஜெ மரண நாடகம்!

ஜெயலலிதா மரணமடைந்ததிலிருந்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்காக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் தனது பதவி பறிபோனதும் ஓ.பன்னீர் செல்வம் கூறி வருகிறார். அவர் இவ்வாறு கூறும்பொழுதெல்லாம் எடப்பாடி பழனிசாமி அணியினரோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேலும் ஜெயலலிதா உயிரிழந்தபோது முதல்வராக இருந்தது பன்னீர் செல்வம்தான் அப்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து வாய் திறக்காத ஓபிஎஸ் தற்போது ஏன் ஜெயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறி வந்தனர். மேலும் ஓபிஎஸ் கிட்டத்தட்ட 9 மாதங்களாக ஜெ மரணம் தொடர்பாக நீதி விசாரணை அமைக்கப்பட வேண்டுமென்று கூறிவந்தார். ஆனால் அதனை எடப்பாடியார் தரப்பு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

இத படிச்சிட்டு தொடருங்கள் : ஜெ மரணம் நீதி விசாரணை : முதல்வர் அறிக்கை சொல்வது என்ன?

இந்நிலையில், கட்சிக்குள் தினகரனின் எழுச்சி எடப்பாடி பழனிசாமியால் கட்டுப்படுத்த முடியாமல் வளர்ந்து செல்கிறது. மேலும் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களால் தமிழக அரசுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாமென்ற நிலைதான் இருக்கிறது. இதனால் தினகரனை சமாளிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைய முடிவெடுத்ததாக தெரிகிறது. அதன்பிறகுதான் ஓபிஎஸ்ஸின் பிரதான கோரிக்கையான ஜெ மரணத்தில் நீதி விசாரணை வேண்டுமென்பதை நிறைவேற்ற பணிந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க : நீட் தேர்வு விலக்கு : ஏமாற்றிய மத்திய அரசு!

மிக முக்கியமாக தற்போதைய தமிழக அரசு மாநில அக்கறையிலும், மாநிலத்துக்கு செயல்படுத்தும் திட்டங்களிலும் முழுமையாக முதுகெலும்பு இழந்து மத்தியில் ஆளும் பாஜகவிடம் வளைந்திருக்கிறது. நெடுவாசல், கதிராமங்கலம், விவசாய பிரச்னை என தற்போதைய தமிழக அரசு மாநில நலனுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அரசு மீது மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். மேலும் நீட் தேர்வில் தமிழக அரசு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. நீட் தேர்வு விவகாரமும் தமிழக அரசு மீது மக்களுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தோல்விகளையெல்லாம் தமிழக அரசு மறைத்து மக்களை வேறு பக்கம் திசை திருப்பவே, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் அரங்கேற்றிய பழைய நாடகத்தை தற்போது அப்டேட் வெர்ஷனாக்கி விசாரணை கமிஷன் அமைக்கிறோம் என்று அரங்கேற்ற ஆரம்பித்திருக்கிறதாகவே அனைவராலும் கூறப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*