சுதர்சன சக்கரத்தின் மகிமைகள்

சுதர்சன சக்கரத்தின் மகிமை பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதன் ஆற்றல் அளவில்லாதது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கும். சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் ‘சக்ரா’ என்றால் இடைவிடாத செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களும் ஓய்வெடுத்தாலும் இதுமட்டும் சுழன்று கொண்டே இருக்கும்.

[விபூதி எப்படி வைக்க வேண்டும் தெரியுமா? : விபூதியை இந்த விரலால் நெற்றியில் பூசாதீர்கள்!]

சாதாரணமாக ‘சுதர்சன சக்கரம்’ கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால். விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.

எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மறுபடியும் அதன்இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.

[மகாபாரதத்தின் அதிர்ச்சியூட்டும் இரகசியங்கள்]

ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை ‘ரன்ஸகதி’ என்பர்.

சுழலும் போது சக்கரம் சத்தம் எழுப்புவதில்லை. அதனுடைய உருவம் வடிவம் எத்தகையது என்றால்.சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.

[நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் பலன்கள் : நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்க்கை சொர்க்கமே…!]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*