ஜீவசமாதி அடைவதற்காக தண்ணீர் மட்டுமே பருகும் முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஜீவசமாதி அடைய விரும்பும் முருகன் தண்ணீர் மட்டுமே பருகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, கடந்த 1991- ஆம் ஆண்டு, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முருகன், நளினி ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். இவர்கள் கணவன், மனைவி என்பதால், இருவரும் மாதத்தில் ஒரு முறை சந்தித்து பேச, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசின் நிர்பந்தத்தால், அதில் தொடர்ந்து  தடை ஏற்பட்டு வருகிறது.

இதையும் படிச்சிருங்க : ராஜீவ் கொலை வழக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

இதற்கிடையே 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு சிறை வாழ்க்கையை தொடர விரும்பவில்லை என்றும் சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புவதாகவும் முருகன் சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதே கோரிக்கை உள்ள கடிதத்தை முருகன் நேற்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிவைத்துள்ளார். ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சி இணைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முதல்வரின் இந்த செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. சிறையில் இருக்கும் முருகனோ தோற்றத்திலும் சாமியார் போலவே காவி உடை, தலையில் நீண்ட முடியுடன் இருக்கிறார். அவர் கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் முருகன் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தெரியுமா : ராபர்ட் பயஸ் – ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது : தமிழக அரசு

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*