பாஜகவின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் : மு.க.ஸ்டாலின்

டெல்லியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்துக்கேற்ப ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுகவின்  ஓ.பன்னீர் செல்வம் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி ஆகிய இரண்டு அணிகளும் இணைவதற்கு வசதியாக, ஜெ மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா இல்லம் நினைவில்லமாக அறிவிக்கப்படுமென்று சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளும் அமித்ஷா தமிழகத்துக்கு வருவதற்கு முன் வரும் திங்கட்கிழமை இணையலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன. இதற்கிடையே ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதமும் எழுதியிருக்கின்றனர்.

இதையும் படிச்சிருங்க : டெல்லியின் அழுத்தத்தால் கடைசி நேர நிபந்தனைகளை கைவிட்டாரா பன்னீர்?

இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க, தமிழக அரசு உத்தரவிட்டது சட்டப்படி தவறு என தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். லண்டனிலிருந்து தமிழகம் திரும்பிய மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது சட்டப்படி தவறு.தமிழக அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க சிபிஐ விசாரணை கோரிய பன்னீர்செல்வம் தமிழக அளவிலான விசாரணையை ஏற்றுக் கொண்டிருப்பதால்,தனக்கு கமிஷன் கொடுத்தால் போதும் என்பதை ஒத்துக் கொள்வாரா? டெல்லியில் இருந்து கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்று ஸ்டாலின் கூறினார்.

இது தெரியுமா : கிணறை ஒப்படைத்தார் ஓபிஎஸ்!

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*