ப்ரியாமணி: வரும் ஆகஸ்ட் 23 அன்று திருமணம்

நடிகை பிரியாமணி, தனது நீண்ட நாள் காதலர் முஸ்தபா ராஜை வரும் 23-ம் தேதியன்று திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

[பிக் பாஸ்: ஓவியா போல் நடிக்க ஆட்கள் தேவை]

இதுபற்றி அவர், “பெங்களூரில் பதிவு திருமணம் செய்கிறோம். எங்கள் திருமணம் எளிமையாக நடைபெறும். ஏன் பதிவு திருமணம் என்று பலரும் கேட்கின்றனர். நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு குடும்பத்தினரின் மத உணர்வை காயப்படுத்த வேண்டாம் என்றுதான் பதிவு திருமணம் செய்கிறோம். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா? என்றும் கேட்கிறார்கள். கண்டிப்பாக நடிப்பேன், எனக்கு நடிப்பின் மீது தீராத காதல் உண்டு. அதற்கு திருமணம் தடையாக இருக்காது, திருமணம் முடிவான பிறகு இரண்டு படங்களில் புக் செய்யப்பட்டிருக்கிறேன். திருமண வரவேற்பு முடிந்த இரண்டாவது நாளே எனக்கு படப்பிடிப்பு இருக்கிறது’ என்று கூறினார்.

[மீண்டும் திரையுலகில் கால்பதிக்கும் நஸ்ரியா]

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*