அணிகள் இணைவு: யாருக்கு என்ன பதவி?

அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இன்று இணைய இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் கடந்த 18-ஆம் தேதி ஜெ சமாதியில் இணைவதாக இருந்தன. ஆனால் ஓபிஎஸ் தரப்பினரின் கடைசி நேர நிபந்தனைகளால் இணைப்பு நடவடிக்கை இழுபறியில் இருந்து வந்தது. தற்போது இரு அணிகளுக்கும் பேரம் படிந்துவிட்டதாகவும் அதன்படி ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி மற்றும் கட்சி வழிகாட்டுதல் குழு தலைமை பொறுப்பும் வழங்கப்படுமென தெரிகிறது. மேலும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் மற்றும் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிச்சிட்டு தொடருங்கள் : சசிகலா இன்று அதிமுகவிலிருந்து நீக்கம்!

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கவிருக்கிறது. இக்கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கவிருக்கிறார். இந்த கூட்டத்தில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற ஓபிஎஸ்ஸின் பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படுமென்று தெரிகிறது. மேலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்கது. சசிகலா நீக்கப்படுகிறாரென்ற அறிவிப்பு வந்த சற்று நேரத்தில் மெரீனாவில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதியில் இரு அணிகளும் இணையவிருக்கின்றன. இதற்காக ஜெயலலிதா சமாதி மலர்களால் மீண்டும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினால் அடுத்தகட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதில் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவிருப்பதால் இன்று மாலையே தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மதியம் ஒரு மணி அளவில் மும்பையிலிருந்து சென்னைக்கு திரும்புகிறார். இதனால் தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்விதுறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனை பொதுப்பணித்துறைக்கு மாற்றி விட்டு அந்த பதவியை மீண்டும் மாஃபா பாண்டியராஜனுக்கு வழங்க திடமிடப்பட்டுள்ளது. பதவி இல்லாதவர்களுக்கு பல கோடி ரூபாய் அளவில் வெளிநாடுகளில் வைத்து பணமும் செட்டில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தெரியுமா : டெல்லியின் அழுத்தத்தால் கடைசி நேர நிபந்தனைகளை கைவிட்டாரா பன்னீர்?

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*