அன்று காலில் விழுந்தார்”இன்று கவிழ்த்தார்…!Video

அதிமுகவை அமாவாசைகளாக்கிய குருமூர்த்தி!

நடராஜன் உடல் நிலை: பரோலில் வர விரும்பாத சசி…!பின்னணி தகவல்கள்!

நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!
இன்று காலை எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து நடத்திய கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்து நீக்கி தீர்மானத்தை முன் மொழிந்தும் வழிமொழிந்தும் சசிகலாவை அதிமுகவில் இருந்து ஓரம் கட்டினார் எடப்பாடி பழனிசாமி.

 

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இதே பழனிசாமி பன்னீருக்கு எதிராக நடத்திய ஆபரேஷன்களால் சசிகலா மனதில் இடம் பிடித்தார். கட்சி பிளவு பட்ட போது சசிகலாவிடம் பணிந்தும் குனிந்தும் பவ்யமாக நடந்து முதல்வராக தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கெஞ்சியதன் விளைவாக தன் நம்பிக்கைக்குரிய நபராக எடப்பாடி இருப்பார் என்றுதான் அவரை முதல்வராக்கினார் சசிகலா.

அன்று நடந்தது என்ன?

கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வழிமொழிந்தும், முன் மொழிந்தும் அதிமுகவின் பொதுச் செயலாளார் ஆனார் சசிகலா. அப்போது நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சசிகலா செல்லவில்லை. அவர் போயஸ் கார்டனிலேயே இருந்தார். ஆனால் அவரை பொதுச்செயலாளர் ஆக்கிய தீர்மான நகலை தாம்பாளத்தட்டில் வைத்து பவயமாக போயஸ் கார்டன் எடுத்துச் சென்ற எடப்பாடி பழனிசாமியும், பன்னிர்செல்வமும் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கி தீர்மான நகலை அவரிடம் வழங்கினார்கள்.


பன்னீரின் முதல்வர் பதவி பறிபோன நிலையில் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பன்னீர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பினார். தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ ஆதரவு இருந்தும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக கொடுக்க வில்லை. அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். கூவத்த்தூரில் தன் நம்பிக்கைக்குரிய எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அப்போது இரண்டாவது முறையாக சசிகலா காலை தொட்டு வணங்கினார் எடப்பாடி.
சசிகலா சிறை சென்ற பிறகு பாஜக கட்டுப்பாட்டில் சென்ற எடப்பாடி பன்னீருடன் இணையும் நிலையில் யாருடைய காலில் விழுந்து வணங்கினாரோ அதே சசிகலாவை அதிமுகவை விட்டு இன்று நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

முதல்வராக்கிய சசிகலா பதவியை பறித்தார் எடப்பாடி பழனிசாமி!

“சீட்டில் இருந்து இழுத்து வீச வேண்டிய நேரம் வந்து விட்டது”: தினகரன் ஆவேசம்!

ஜெ உடல்நிலை குறித்த ரிப்போர்ட்டை தினமும் கேட்டார் மோடி : நடராஜன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*