தமிழன் அணிந்திருப்பது கோமாளிக் குல்லா – கமல்

இன்று அதிமுக அணிகள் இணைவதையொட்டி தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் இன்றுவரை தமிழக அரசியல் மிகவும் மோசமானதாகவே இருந்து வருகிறது.இந்நிலையில் அதிமுக அரசை வெளிப்படையாக சமூகவலை தளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தார் கமல். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கமல் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு தமிழக அமைச்சர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதைத் தொடர்ந்து கோரக்பூர் குழந்தைகள் இறப்பையொட்டி, ஒரு மாநிலத்தில் துயர மற்றும் ஊழல் சம்பவங்கள் நிகழ்ந்தால் அம்மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எதிர்க்கட்சிகள் குரலுழுப்புகின்றன. தமிழக முதலமைச்சரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்துவிட்டது. என்னுடைய நோக்கமானது சிறந்த தமிழகமாகும். என்னுடன் இணைத்து எனது குரலுக்கு வலுசேர்க்கும் தைரியம் யாருக்கு உள்ளது? என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

[குதிரைபேரத்தை விட மாணவர்களின் எதிர்காலமே முக்கியம் – கமல்]

இந்நிலையில், இன்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் அணிகள் இணைப்புக்காக அதிமுக அலுவலகம் செல்கிறேன் என்று கூறியிருந்தார்.

[தற்காப்பு முக்கியமில்லை தன்மானம்தான் முக்கியம் : முரசொலி விழாவில் கமல்]

இந்த பரபரப்பான சூழலில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காந்திக்குல்லா! காவிக்குல்லா! காஷ்மீர் குல்லா!! தற்போது கோமாளி குல்லா. தமிழன் தலையில் போதுமா? இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா ” என்று பதிந்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

[இந்தியாவின் சமூக பிரச்சனைகளில் தீவிரம் காட்டும் கமல்]

[திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது: கமல்ஹாசன்]

[நீட் ஓராண்டு விலக்கு கமல் வரவேற்பு!]

[“திமுகவும் அதிமுகவும் மழுங்கிவிட்டன… மாற்றுக்கருவி வேண்டும்” – கமல்]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*