நெட்டிசன்கள் அட்டூழியம்: அமித்ஷா பரிதாபங்கள்

பாஜக தலைவர் அமித்ஷா, தமிழ்நாட்டில் பாஜக-வை பலப்படுத்தாமல் ஓயமாட்டேன் என்று கூறியிருந்தார். இதற்காக நாளை (ஆகஸ்ட் 22) அவர் சென்னை வருவதாக இருந்தது. தற்போது அமித்ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அமித்ஷா தமிழக பாஜக தலைமை மீது அதிருப்தி என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

[அமித்ஷா தமிழக வருகை ஒத்திவைப்பு ஏன்?]

இந்நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகையை கலாய்க்கும் விதமாக, அவர் சாயலில் உள்ள இயக்குனர் சந்தான பாரதி  புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், அதிமுக பாஜக-வின் அரசாங்கமாக செயல்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில் அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாற்றப்பட்ட புகைப்படத்தையும் உலாவ விட்டிருக்கிறார்கள்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*