மடோனா: மறைக்கப்பட்ட குழந்தைகள் முகம் வெளியானது

அமெரிக்க இசையுலகின் மிகப் பிரபலமான பாடகி மடோனா. பாடகியாக மட்டுமல்லாமல் 20-க்கும் அதிகமான படங்களிலும் நடித்திருக்கிறார். அதிக மியூசிக் ஆல்பம் விற்பனையாகும் பாடகிகளின் பட்டியலில், இவர் முதன்மை வகிக்கிறார். கின்னஸ் சாதனை பட்டியலில் அதிக மியூசிக் ஆல்பங்கள் விற்பனையாகும் இசைக் கலைஞர்களில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

[ஈழத்தமிழ் பாடகி மாயாவின் புது ஆல்பம்]

இவருக்கு ரோக்கோ, டேவிட், லோர்டஸ், மெர்சி ஜேம்ஸ், எஸ்தர் மற்றும் ஸ்டெல்லா என ஆறு குழந்தைகள். இவர்கள் அனைவரின் புகைப்படத்தையும் இதுவரை மடோனா வெளியிட்டதில்லை. சமீபத்தில் தன் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய மடோனா, அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மடோனாவின் குழந்தைகளில் எஸ்தர் மற்றும் ஸ்டெல்லா ஆகியோர் இரட்டையர்கள், கடந்த பிப்ரவரி மாதம்தான் அவர்களை தத்தெடுத்தார். ஏற்கனவே ஜூன் மாதம் தந்தையர் தினத்தன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில் எஸ்தர் மற்றும் ஸ்டெல்லாவின் முகம் மறைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தில்தான் மடோனாவின் அத்தனை குழந்தைகளையும் பார்க்க முடியும்.

 

 

 

 

 

 

 

 

முக்கிய செய்திகள் :

[#BlueWhaleSuicideGame மூலமாகத்தான் எனது மகன் இறந்தான் – ஒரு பெண்ணின் கண்ணீர் #Video]

[தமிழன் அணிந்திருப்பது கோமாளிக் குல்லா – கமல்]

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*