ஆண் நண்பருடன் பேசினார் என்று பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ்: #வீடியோ_உள்ளே

இந்தியாவின் சமூக பண்பாட்டு தளத்தில் வன்முறைகள் ஆழமாக வேரூன்றி வருகிறது. மதம், சாதி, இனம், உணவு, என சகல தளங்களிலும் ஆழமாக வேர் விடும் பண்பாட்டுப் பாசிசம் இந்திய சமூகங்களிடம் கும்பல் மன நிலையை அதிகரித்துச் செல்கிறது.  மாட்டுக்கறி உண்கிறவர்கள்,முஸ்லீம்கள், தலித்துக்கள் என தாக்குதலை தொடுத்து வந்தவர்கள் காதலையும் சமூக சீர்கேடான ஒன்றாக கருதுகிறார்கள்.

கடந்த புதன் கிழமையன்று நாளந்தா மாவட்டம் (பீகார்), தேசிய நெடுஞ்சாலை 110 அருகே மொபைலில் பேசிக்கொண்டிருந்த பெண்ணை சிறப்பு காவல்துறை அதிகாரி மூர்க்கமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

[இதையும் வாசிங்க: இந்தியாவின் ஐ.எஸ் ஆர்.எஸ்.எஸ் அச்சுறுத்தும் வீடியோ]

மொபைலில் ஆண் நண்பருடன் பேசுகிறார் என எண்ணி கோபமடைந்து, மொபைலை பறித்துக்கொண்டு முடியை இழுத்து மூர்க்கமாக தாக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாது அந்த பெண்ணின் நடத்தை குறித்தும் தவறாக பேசியுள்ளார். சம்பவ இடத்திலிருந்த மக்கள் இதை வீடியோ எடுத்திருக்கிறார்களே தவிர யாரும் உதவ வரவில்லை. இந்த வீடியோ வைரலாக பரவிய பின்னர் அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரியை பதவிநீக்கம் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டெய்லி பாஸ்கர் என்ற பத்திரிகை நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறது. அகில இந்திய மாணவர் அமைப்பும் இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கின்றனர். வட இந்தியாவில் அரசு அதிகாரிகள் பலரும் ஆர்.எஸ்.எஸ் மனநிலையில் இருப்பது வருந்தத்தக்கது.

[இந்து மதத்தின் அச்சுறுத்தல் ஆர்.எஸ்.எஸ்: முன்னாள் பாஜக ஊழியர்]

 

நன்றி: Daily Bhaskar

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*