இசை வேளாளர்களை இழிவுபடுத்தியதாக கமல், பிக்பாஸ் மீது வழக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தலிருந்தே பல்வேறு சமூகத்தினரால் குற்றம் சுமத்தப்பட்டு சர்ச்சைகளுக்குள்ளாகி வருகிறது. கலாச்சாரம் பண்பாடு சார்ந்து பலர் இந்நிகழ்ச்சியை விமர்சித்தும் வருகின்றனர். இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், “விஜய் டிவியானது நாத்திகர்களையும், கம்யூனிஸ்டுகளையும், கிருத்துவர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தமிழ்ப் பண்பாட்டை சீரழித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

[இதையும் வாசிங்க : கமல் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகாது?! – அர்ஜுன் சம்பத்!!]

தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக ஒரு குற்றவியல் அவதூறு மனுவை இரு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி நீதிமன்றத்தில் இசைவெள்ளாளர் சமூகத் தலைவர் கே.ஆர்.குஹேஷ் தாக்கல் செய்துள்ளார். அதில் ஜூலை 14 ம் தேதி வெளியான பிக்பாஸ் எபிசோடில் அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இசைவெள்ளாளர் சமூகத் தலைவர் கே.ஆர்.குஹேஷ் இதுகுறித்து கூறியதாவது, இசை வெள்ளாளர் சமூகத்தினரால் கடவுளாக கருதப்படும் கருவி நாதஸ்வரம். அந்த நாதஸ்வரத்தை அவமரியாதை செய்யும் விதமாக ஜூலை 14ஆம் தேதி வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எபிசோடில் நடிகர் சக்தி தனது கையில் வைத்திருந்த நாதஸ்வரத்தை அலட்சியமாக ஒரு கையிலிருந்து மற்றோரு கைக்கு தூக்கிப்போட்டு விளையாடியுள்ளார். அதுமட்டுமன்றி பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் உணவருந்தும் டைனிங் டேபிளின் மீது நாதஸ்வரத்தை வைத்து இழிவுபடுத்தியுள்ளனர்.

இது இசைவெள்ளாளர் சமூகத்தினர் மனதை புண்படுத்துவதாகவும் அவர்களை அவமரியாதை செய்யும் விதமாகவும் அமைந்துள்ளது. இது குறிப்பாக ஒரு சமூகத்தினரை மட்டும் இழிவு படுத்தக்கூடிய செயல் என்பதை நடிகர் சக்தி, கல்ஹாசன், விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரித்து வரும் ‘எண்டேமோல் ஷைன்’ நிறுவனம் அனைவரும் நன்கு அறிவர். இதுசம்மந்தமாக ஒருவார காலத்திற்குள் குறிப்பிட்ட அனைவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த செய்தி நாளிதழ்களிலும் விஜய்டிவியிலும் வெளியாக வேண்டும் என ஆகஸ்ட் 3ம் தேதி வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தேன். ஆனால் இதுவரை எவரும் இதுகுறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை. இதனால் அவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள் : 

ஜூலி ஒரு தேசவிரோதி – அர்ஜுன் சம்பத்

விசாரணை வளையத்தில் பிக்பாஸ்: கமலை கார்னர் செய்ய திட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி – கிழியும் முகத்திரைகள்

பிக்பாஸ் : காயத்ரியால் பலிகொடுக்கப்பட்ட ஓவியா, ஜூலி

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*