புதுச்சேரி தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை – நீதி விசாரணை கோரிய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

புதுச்சேரியைச் சேர்ந்த தலித் வாலிபர் ஒருவர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி அரசை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

புதுச்சேரி, சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரின் மகன் சபரிநாதன் (வயது 27). அவரை கடந்த 22ம் தேதியன்று காலை 10 மணியளவில் முத்தியால்பேட்டை போலீசார் விசாரணையின் பேரில் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையின் பேரில் அழைத்துச் சென்றுவிட்டு இரவு 10 மணி வரையில் காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக அடித்து உதைத்து சபரிநாதனை சித்தரவதை செய்துள்ளனர்.

[கொடூர சம்பவம் : பிச்சை எடுத்த பெண்ணை கொலை செய்த கும்பல! #வீடியோ_உள்ளே]

 

 

 

 

 

 

சித்ரவதைக்குப் பிறகு போலீசார் மணியை அழைத்து இரண்டு வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவரை ஒப்படைத்துள்ளனர். அப்போது சபரிநாதனின் முகம், கை, கால், முதுகு என உடல் முழுவதும் லத்தியால் அடித்த காயத் தழும்புகள் இருந்துள்ளன. அதைக் கண்டதும் அவரது நண்பர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய சபரிநாதன் அன்று இரவு 2 மணியளவில் மனஉளைச்சல் காரணமாக தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய சபரிநாதன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். சபரிநாதன் தற்கொலை செய்து கொள்ள முத்தியால்பேட்டை போலீசார் செய்த சித்தரவதையே காரணம். இந்நிலையில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் அவசரமாக சபரிநாதனின் உடலை பிரேதப பரிசோதனை முடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சபரிநாதனின் தந்தை மணி தன் மகன் சாவுக்குக் காரணமான முத்தியால்பேட்டை போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

[இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்]

எனவே, புதுச்சேரி அரசும், காவல்துறையும் உடனடியாக தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக முத்தியால்பேட்டை போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இறந்து போன சபரிநாதன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இந்த துர்சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆண் நண்பருடன் பேசினார் என்று பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ்: #வீடியோ_உள்ளே

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*