மாநில சுயாட்சியை காப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் : ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை காப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பேசினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.  மேலும், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் 4-ஆம் தேதி, பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையில், அரசு உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்தது. நீட் விவகாரத்தில் தமிழக அரசு மொத்தமாக தோல்வியை தழுவி தமிழக மாணவர்களை பெரும் இன்னலுக்கு தள்ளியிருக்கிறது.

இதையும் படிங்க : நீட் அநீதி : எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு தினகரன் அணி ஆதரவு

இந்நிலையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டது எனவும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எதிர்கட்சிகள் அறிவிப்புகள் வெளியிட்டன.  அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி அனைத்து கட்சியினர் சார்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்த முழக்கங்கங்களும் எழுப்பபட்டன. இதற்கிடையே இந்த போராட்டத்தில் டிடிவி தினகரன் அணி ஆதரவாளர்களும் பங்கேற்பார்கள் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று கூறியிருந்தார். ஆனால் அவர்கள் பங்கேற்கவில்லை.

இதையும் படிங்க : நீட் அநீதி : முழுமையாக தோல்வியை தழுவிய தமிழகம்

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. தற்போது மாநில சுயாட்சியை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. கிராமப்புற மாணவர்கள் டாக்டர் ஆவதை மத்தியில் ஆளும் பாஜக அரசு தடுத்து வருகிறது. முதலமைச்சரும், அமைச்சர்களும் டெல்லிக்கு செல்லும்போதெல்லாம், நீட் தேர்வு விவகாரத்தில் நல்லது நடக்கும், நல்லது நடக்கும் என்று தொடர்ந்து கூறிவந்ததன்  அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. அவர்களுக்கு என்ன நல்லதோ அதை மட்டுமே செய்துள்ளார்கள். என்று பேசினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*