தமிழகத்தில் துக்ளக் தர்பார் : மு.க.ஸ்டாலின்

Mk Stalin Deputy Chief Minister of Tamil Nadu from 2009 to 2011

தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது, எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் பான், குட்கா  அதிபர்களிடம்   லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகியது. ஆனால் தமிழக அரசு இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றங்களில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இதனையடுத்து சென்னையில் எங்கெல்லாம் குட்கா விற்கப்படுகிறது என ஆய்வு செய்து புகைப்படங்களுடன் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளிப்படுத்தினார். மேலும் பெண்கள் முதல் குழந்தைகள் வரை குட்கா விற்க உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என குற்றம்சாட்டினார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை செய்யப்பட்ட குட்காவை எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவைக்கே எடுத்து வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இது அவர்களுக்கு எங்கே கிடைத்தது என கேள்வி எழுப்பினார். மேலும் இதுகுறித்து பேசிய சபாநாயகர் தனபால் எதிர்கட்சிகளின் செயலை உயர்மட்ட விசாரணைக்கு அனுப்புவோம் என தெரிவித்திருந்தார்.  இதுகுறித்து பேரவை உரிமை குழு வரும் 28 ஆம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி  ஜெயராமன் தலைமையில் கூடுகிறது. இதில் ஸ்டாலின் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்டாலின் கொடுத்துருக்க பட்டம் என்ன தெரியுமா?

இந்நிலையில் பேரவை உரிமை குழு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேரவை குழு கூட்டப்பட்டிருக்கிறது. குட்கா குறித்து நான் கூறிய அனைத்து ஆதாரங்களும் உண்மை.  எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை எடப்பாடி அரசு இழந்துவிட்டது. ஆட்சியை தக்க வைக்க பித்தம் பிடித்து அலைகின்றனர் தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடந்து கொண்டு இருக்கிறது என்றார். இதற்கிடையே அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்த பின் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெரும்பான்மை இல்லை என தெரிந்த பின்னும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடவில்லை. ஆளுநரின் தாமதத்தை பயன்படுத்தி 19 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார். சட்டசபையில் நடைபெறாத நிகழ்வுக்கு சபாநாயகர் சார்பில் கட்சித் தாவல் சட்டத்தில் நோட்டீஸ் அளித்துள்ளது. ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் மனு அளிப்பது கட்சி தாவல் தடை சட்டத்தில் வராது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல்வரின் தூண்டுதல் பேரிலேயே சபாநாயகர் ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்துள்ளார் பேரவைத் தலைவர் முதல்வராகி விடுவாரோ என்ற அச்சத்தில் அவரை வைத்தே எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க : திடீர் முக்கியத்துவம் பெறும் தலித் பிரமுகர் தனபால்

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*