பிக்பாஸ் ஜூலிக்கு திருமணம்?!

ஜூன் மாதத்திலிருந்து ஜல்லிக்கட்டு ஜூலி என்ற சொல் வழக்கொழிந்து பிக்பாஸ் ஜூலி என்றாகிவிட்டது. ஜல்லிக்கட்டு மூலம் தமிழர்கள் மனம் கவர்ந்த பெண்ணாக வலம் வந்த ஜூலியின் ஒட்டு மொத்த மரியாதையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பறிபோனது. ஆம் அந்த நிகழ்ச்சியில் ஒரு சிலருக்கு ஒத்துஊதும் செயலை செய்ததன் மூலமாகவும் பிறரை புறம் பேசியதின் மூலமாகவும் குறிப்பாக பொய்பேசியதன் மூலமாகவும் தமிழ் மக்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் வெறுக்கப்பட்ட ஆளாக மாறினார்.

[#Big boss-25 லட்சத்துக்கு தன்னை விற்றுக்கொண்ட மெரினா ஜூலி!]

சமீபத்தில் தான் ஓவியா பிக்பாஸ் வீட்டிலிருந்து தானாக வெளியேறிய பின்பு ஜூலி இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது தந்து தவறை உணர்ந்து நடந்து கொள்வதாக அறிவித்தார். கமல் முதல் ஓவியா வரை அவருக்கு ஆதரவு தந்து பேசினார். அவர் எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் அவப்பெயருடன் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த ஜூலி தன்னை பற்றி மக்கள் சமூகவலை தளங்களில் கூறிய கருத்துக்களை பார்த்து மனமுடைந்து போனார். சக போட்டியாளர் பரணியை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். தற்போது ஊடகத்தில் வேலை தேடி வரும் ஜூலிக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

[ஜூலியானா ஒரு தேசவிரோதி – அர்ஜுன் சம்பத்]

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மனவருத்தத்தில் உள்ள ஜூலிக்கு கல்யாணம் செய்துவைப்பது தான் நல்லது என அவரது குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து தீவிரமாக மாப்பிள்ளையை தேடி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் கால்பதிக்க வேண்டுமென்ற ஜூலியின் கனவு பலிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

[இதை படிங்க : உடுமலை கவுசல்யாவும் மெரினா ஜூலியும்!]

[#Big bossடமில் பொண்ணு ஜூலியின் டுமீலுணர்வு!]

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*