விஜயகாந்த்: திரையுலக சத்ரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மதுரையில் இருந்து அழகான முகத்தோற்றம் இல்லாத கருப்பு நிற மனிதன் ஒருவர் சினிமாவில் நடிக்கும் கனவுகளோடு சென்னை வந்தார். அப்போது அவரை ஏற்றுக்கொள்ள இந்த திரையுலகம் தயாராக இல்லை. எனினும் மனம்தளராமல் தொடர்ந்து போராடி தன்னை ஒதுக்கிய திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகன் ஆனார், அவர்தான் விஜயகாந்த். ஒரே ஆண்டில் 10-க்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கு போட்டியாக இருந்தார்.

[இதையும் வாசிங்க: விஜயகாந்த் சாதித்தையாவது சாதிப்பாரா ரஜினி?]

விஜயகாந்த்தின் நிறத்தை காரணம் காட்டி அவருடன் நடிக்க மறுத்த கதாநாயாகிகள் சிலர், பின்னாளில் அவருடன் நடிக்க போட்டி போட்டது வேற கதை. தொடர்ந்து தூங்கக்கூட நேரமில்லாமல் திரையுலகில் இயங்கி வந்தார். ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் கஷ்டமான காட்சிகளில் கூட நடிப்பார். நடிகர் சத்யராஜ் இதுகுறித்து, “நான் படத்தில் நடிக்கும்போது விஜயகாந்த் அண்ணனை போல் சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என பல இயக்குனர்கள் கூறுவார்கள். ஆனால் அவர் போல் எல்லாம் பறந்து விழுந்து டேபில்களை உடைப்பதெல்லாம் எனக்கு சாத்தியமில்லை என்று கூறினேன்” என சகாப்தம் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். தமிழ் திரையுலகில் விஜயகாந்த் அவர்களால் வாழ்ந்த கலைஞர்கள் பலர் இருக்கின்றனர்.

‘செந்தூரபாண்டி’ திரைப்படத்தில் விஜயகாந்துடன் நடித்த பிறகுதான் விஜய்யின் திரைப்பயணம் முன்னேற்றம் அடைந்தது. இதே காரணத்துக்காகதான் சூர்யா
‘பெரியண்ணா’ படத்தில் நடித்தார்.

 

 

 

 

 

 

 

 

புதுமுக இயக்குனர்களுக்கும், புதிய கலைஞர்களுக்கும் அதிகமாக வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். திரையுலகை விட்டு அரசியலுக்கு சென்ற விஜயகாந்த், தற்போது நடிப்பதில்லை. இன்று உடல்நிலை சரியில்லாத அவரது பேச்சுகளை கலாய்ப்பவர்களுக்கு விஜயகாந்தின் கடின உழைப்பு தெரியாது. பக்கம் பக்கமாக வசனம் கொடுத்தாலும் சலைக்காமல் பேசுவார். அடித்தட்டு மக்களின் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்து மக்களுக்கு நெருக்கமானார். எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அதிகமான மக்களை தன்பக்கம் ஈர்த்தவர். அந்த நம்பிக்கையால்தான் அரசியலில் தைரியமாக களமிறங்கினார். தமிழ் படங்களில் மட்டுமே நடித்த வெகுசில கதாநாயகர்களில் இவரும் ஒருவர். சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் தவிக்கிறார், அவர் மீண்டும் நல்ல உடல்நலத்துடன் திரும்ப பலர் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அவருக்கு 66-ஆவது பிறந்தநாள்… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜயகாந்த்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*