பாஜக கொடுத்த அழுத்தத்தில் தனபால் நோட்டீஸ்!

பாஜக கொடுத்த அழுத்தத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவின் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்ததையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியுள்ளதால் பழனிசாமி தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கவர்னருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தனபாலை முதல்வராக அறிவிக்க வேண்டுமென்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதும் இன்று காலை தனபாலுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பழனிசாமியை நீக்குவதில் தினகரன் தரப்பு மும்முரமடைந்திருப்பதை உணர்ந்த முதல்வர் பழனிசாமி தனபாலுடன் ஆலோசனை நடத்தி அதன்பிறகு அரசு கொறடாவை வைத்து எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் பரிந்துரைக்க வைத்தார்.

இதையும் படிச்சிருங்க : மும்பைக்கு ஓடிப்போன கவர்னர்!

இந்நிலையில், சபாநாயகர் தனபால் புதுச்சேரி விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாதென்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் அந்த நோட்டீஸில் அவர் கூறியுள்ளார். இன்று காலை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தனபாலை சமாதானப்படுத்திவிட்டதாகவும் அதனால்தான் கொறடா பரிந்துரைத்த சிறிது நேரத்திலேயே சபாநாயகர் தனபால் எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத படிச்சிங்களா : திவாகரன் அறிவிப்பு எதிரொலி : தனபாலுடன் முதல்வர் தீவிர ஆலோசனை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*