மாரி 2: தெலுங்குக்கு செல்கிறார் தனுஷ்

சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘விஐபி-2’ நேற்று தெலுங்கில் வெளியானது. இதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த இரண்டாம் பாகமும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[இதையும் வாசிங்க: விஐபி-4 கதை வேலைகளில் தனுஷ்]

தனுஷுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் அதிகமாகியுள்ளது. ‘விஐபி-2’ தெலுங்கு வெளியீட்டை முன்னிட்டு ஹைதரபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தனுஷ், “எனது உண்டர்பார் நிறுவனத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு படங்களை தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன். மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கில் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

[தனுஷ் பிறந்தநாள்: ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன்!]

மாரி- 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன்தான் இதையும் இயக்கவுள்ளார். தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளிலும் தனித்தனியாக உருவாகவுள்ளது. ஒரு தயாரிப்பாளராக தனுஷ், நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். இவர் மலையாளத்தில் தயாரித்துள்ள ‘தரங்கம்’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

[இந்திய அளவில் நம்பரொன் தமிழ் நடிகர் தனுஷ்]

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*