ஷங்கரும் பிரம்மாண்டமும்: 2.0 மேக்கிங்! [#வீடியோ_உள்ளே]

பிரம்மாண்டத்துக்கு பெயர் போனவர் ஷங்கர் என்பது தமிழ் சினிமா அவர்மீது நீண்டகாலமாக கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பம். அப்படி என்னதான் பிரம்மாண்டம் என்று பார்த்தால், படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு மட்டுமே அதிகம் செலவு செய்வார். பாறைகள், தெரு என எல்லாத்துக்கும் பெயிண்ட் அடிப்பது, பிரம்மாண்டமாக ஷெட்டு போடுவது அவர் ஸ்டைல்.

[இதையும் வாசிங்க: பத்திரிகையாளரை தாக்கிய ஷங்கர் படக்குழு]

இந்தப் பாதையில் சென்று கொண்டிருந்த ஷங்கர், படத்தில் வரும் காட்சிகளையும் பிரம்மாண்டமாக அமைக்க முற்பட்ட திரைப்படம் ‘எந்திரன்’.  தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். வழக்கம்போல கார்கள் பறப்பது, நடிகர்களுக்கு மேக்கப் செய்வது போன்ற காட்சிகளே இடம்பெற்றுள்ளன. இந்தமுறையாவது ஹாலிவுட் படங்களின் சாயல் இல்லாமல் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*