பாஜகவுக்கு எதிராக பாட்னாவை குலுக்கிய லாலுவின் பிரமாண்ட பேரணி! படங்கள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரமாண்ட பேரணி ஒன்றை பாட்னாவில் நடத்திக் காட்டியிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். இப்போது பாட்னாவில் நடந்து கொண்டிருக்கும் பல லட்சம் மக்கள் பங்கு பெற்றுள்ள இந்த மாநாடு பீகார் மக்களிடையே அவருக்கிருக்கும் செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது.
லாலு அமைத்த மெகா கூட்டணியை உடைத்து நிதிஷ்குமாரை பாஜக பக்கம் கொண்டு சென்று பீகார் அரசை பாஜக கைப்பற்றிய நிலையில் ‘தேஷ் பச்சாவ் பிஜேபி பகாவ்’ (பாஜகவை துரத்துங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்) என்ற பேரணியை அறிவித்திருந்தார். இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணமூல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பீகாரில் கடும் வெள்ள பாதிப்பையும் பொருட்படுத்தாது பாட்னாவில் காந்தி மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

 


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்,சரத்யாதவ், குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்பார்த்ததை விட லட்சக்கணக்கான தொண்டர்களும் மக்களும் கூடியதால் பாட்னா நகரம் குலுங்கியது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் பரந்து பட்ட எதிர்ப்பை பதிவு செய்ய முடியாத நிலையில் லாலுவின் இந்த எதிர்ப்பு பேரணி பிரமாண்ட வெற்றி அடைந்துள்ளதால் எதிர்க்கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பாஜக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது அகில இந்திய அளவில் லாலுவின் இந்த எதிர்ப்பு மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

 

 

 

 

 

தொடர்புடைய செய்திகள்

நிதிஷ் குமார் அரசியல் தற்கொலை செய்கிறார்

இந்தியாவில் நெருக்கடி நிலை

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*