எடப்பாடி பழனிசாமி பலத்தை நிரூபிக்க தயாரா : ஸ்டாலின்

Mk Stalin Deputy Chief Minister of Tamil Nadu from 2009 to 2011

அதிமுக ஆட்சியை நாங்கள் கவிழ்க்க வேண்டியதில்லை அது தானாகவே கவிழுமென்றும், முதல்வர் எடப்பாடி சட்டமன்றத்தை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க தயாரா என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்து சசிகலா தரப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்ததையடுத்து அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அணியிலுள்ளவர்களை ஒவ்வொருவராக கட்சியிலிருந்தும், கட்சி பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் கூட்டம் கூட்டி தினகரன் மற்றும் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்து வருகிறார். இதனால் அதிமுகவினர் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களின் கடிதத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் இருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சொல்லி உத்தரவிட்டால் இந்த ஆட்சி தப்பிக்குமா என்ற பதற்றமும் அதிமுகவினரிடையே தொற்றிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாலினின் மூவ் என்ன என்பதை தெரிந்துகொள்ள இதை படிங்க

இந்நிலையில், விருதாச்சலத்தில் நடைபெற்று வரும் திமுக பிரமுகரின் திருமண விழாவில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை நாங்கள் கலைக்க தேவையில்லை அது தானாக கவிழும்.  துணை முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வத்திற்கு ஆளுநர் பூங்கொத்து கொடுப்பது எந்த வகையில் நியாயம். சட்டமன்றத்தை கூட்டி பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி தயாரா?  எடப்பாடி ஆட்சியை எம்.எல்.ஏக்களே அப்புறப்படுத்துவார்கள் எனவும், பிறகு திமுக மலரப்போகிறது. தமிழகத்தின் நலன் டெல்லியில் அடகு வைக்கப்பட்டுள்ளது என அவர் பேசினார்.

இதையும் படிங்க : தமிழகத்தில் தற்காலிக ஆளுநரை பாஜக  விரும்புகிறது ஏன் தெரியுமா?

பன்னீர்செல்வத்துக்காக பலி கொடுக்கப்பட்ட அமைச்சர் ஜெயக்குமார் நிலை இதையும் படிங்க

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*