பன்னீரின் சொந்த ஊரில் மொத்த அதிமுகவும் தினகரன் பக்கம்!

திரும்பி பார்க்க வைத்த தினகரன் : அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

தேனி மாவட்டத்தில் மொத்த நான்கு தொகுதிகள் இதில் போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனைத் தவிற மீதி மொத்த அதிமுகவின் கழக, கிளைக்கழக நிர்வாகிகளும் தினகரன் பக்கம் சாய்ந்துள்ளனர்.
இதில் நகைச்சுவை என்ன என்றால் மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் பக்கம் ஒரு ஒன்றிய கிளைக்கழக நிர்வாகி கூட இல்லையாம். காரணம் பதவியில் இருந்த போது அந்த அளவு கட்சியினரை அரவணைத்துச் சென்றிருக்கிறார் பன்னீர்செல்வம், தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று இப்போதும் வளைய வரும் பன்னீர் கையில் தேனி மாவட்டமும் இல்லை சொந்த தொகுதியான போடியும் இல்லை.
தேனியில் இருந்த படிதான் எடப்பாடி பழனிசாமி யை சேலம் மாவட்ட புற நகர் கழக செயலாளர் பதவியில் இருந்து நிக்கினார். அந்த இடத்திற்கு எடப்பாடி பழனிசாமியின் போட்டியாளர் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக எஸ்.கே.செல்வத்தை நியமித்திருக்கிறார்.

இதை வாசிங்க:-ஆளுநரை சந்திப்பதை தவிர்த்தாரா ஸ்டாலின்? 

இவர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர். இணைப்பை எதிர்த்து தினகரன் பக்கம் சாய்ந்திருக்கிறார். பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்கிற அதிருப்தியாளர்களும், எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இணைக்கக் கூடாது என்கிற அதிருப்தியாளர்களையும் தங்கள் பக்கம் திரட்டி வருகிறார் தினகரன்.அத வகையில்தான் பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதி கூடாரமே இப்போது காலியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எழுச்சி இல்லை : தினகரன் சொல்லும் காரணம்!

கடைத் தெருவுக்கு சென்று வர சசிகலா என்ன பூந்தி விக்கிற சாந்தியா?

இதை மிஸ்பண்ணிடாதீங்க:-அதிமுக இணைப்பு இனி சாத்தியமில்லை ஏன் தெரியுமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*