பவராக வலம் வந்த அமைச்சர் தங்கமணியை நீக்கிய தினகரன்

அமைச்சர் தங்கமணியை நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

சசிகலா தரப்பினரின் கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி  அணி இருந்தபோது தற்போது அவர்களை நீக்குவதாக அறிவித்தவர்கள் அனைவரும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனிடம் மிகவும் விசுவாசமாக இருந்தவர்கள். அவர்களில் மிக முக்கியமானவர் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமைச்சர் தங்கமணி என்னை துணை முதல்வராக பதவியேற்கும்படி கூறினார் என்ற உண்மையை போட்டு உடைத்தார். சசிகலா தரப்பினரை எடப்பாடி அணியினர் ஒதுக்கிய பிறகு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகளின் இணைப்பை பெரிதும் விரும்பியவர்களுள் அமைச்சர் தங்கமணியும் ஒருவர் என்று கூறப்பட்டது. மேலும் தமிழக எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி அமைச்சர் தங்கமணிக்கு  மூன்று முறை நேரம் ஒதுக்கினார். அந்தளவுக்கு எடப்பாடி அணியில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்கி வந்தார் அமைச்சர் தங்கமணி.

ஸ்டாலின் மூவ் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க இதை படிங்க

தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரனை நீக்குவதாக அறிவித்ததை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எம்.எல்.ஏக்கள் ஒருபக்கம் ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்க மறுபக்கம் டிடிவி தினகரன், துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலம் மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்தார். அந்த வரிசையில் தற்போது அமைச்சர் தங்கமணியை நாமக்கல் மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்துள்ளார். தினகரன் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்க, சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் அறிவிக்க, இரு தரப்பு அறிவிப்பில் எது உண்மை என்று  அதிமுக தொண்டர்கள் உச்சக்கட்ட குழப்பமடைந்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க :  பாஜக அமைச்சரவையில் இணைகிறதா அதிமுக?

மோடி குறித்து ஜெயலலிதா சொன்னத தெரிஞ்சிக்க இதை படிங்க

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*