கேன்சர் நோயாளிகளை வைத்து விளம்பரம் தேடினாரா பிக்பாஸ் ஆர்த்தி?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இதுவரை வெளியேற்றப்பட்ட மற்றும் வெளியான போட்டியாளர்களிலிருந்து இருவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கின்றனர். இதற்காக அவர்கள் அனைவரும் நேற்றைய நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். அதற்கு ஓவியாவால் வரமுடியவில்லை. நமீதாவும் வரவில்லை. அவர்கள் இருவரைத் தவிர்த்து பரணி, ஆர்த்தி, ஜூலி, சக்தி மற்றும் காயத்ரி ஆகிய ஐவரும் நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

[இத பாத்திங்களா : ஈழத்திலிருந்து ஓவியா ஆர்மியின் புது ஆல்பம் #Video]

அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பின் அவர்களது வாழ்க்கையில், உண்டாகியுள்ள மாற்றங்கள் குறித்து கமல் கேள்வியெழுப்ப, ஒவ்வொருவரும் வரிசையாக பதில் கூறி வந்த நிலையில் ஆர்த்தி பின்வருமாறு பதில் கூறினார். அதாவது “நான் நியாயமா பேசியும் மக்கள் என்னைய ஏன் அவ்ளோ திட்டினாங்கனு தெரில. அதுமில்லாம நிறைய பேரு நாலரை கோடி பேர் பார்க்கும் பிக்பாஸ் வீட்ல போய் நீங்க என்ன பண்ணீங்க? சாப்டிங்க, தூங்குனீங்க, பாத்ரூம் கழுவுனீங்க அத தாண்டி பிக்பாஸ் வீட்ல என்ன பண்ணிங்கனு கேட்டாங்க. நான் ரொம்ப தலைக்கனமானவன்னு வேற சொன்னாங்க. அதனால நான் கண்டிப்பா ஏதாவது பண்ணனும்னு சொல்லி முடிவு பண்ணி என் தலையில கனமே இல்லாம பண்ணிட்டேன் சார்” என்றபடி தனது தலையிலிருந்த விக்கை கழற்றி கமலிடம் அவரது தலையை காட்டினார். ஆர்த்தி மொட்டையடித்திருந்தார்.

அதன் பின்னர் தான் மொட்டையடித்ததன் காரணத்தையும் கூற ஆரம்பித்தார். “நாலரை கோடி பேர் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து என்ன பண்ணீங்க அப்படினு கேட்டவங்களுக்கு இப்ப நான் பதில் சொல்றேன். உலகத்துல கேன்சரால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுறாங்க. அந்த சமயத்துல கேன்சருக்கான ஹீமோதெரபி செய்றப்போ அவங்க தலைமுடியை இழந்துடுறாங்க. அதுக்குப்பிறகு தலைமுடி இல்லாம நம்ம அழகு போயிடுச்சுனு நிறைய பெண்கள் பொதுஇடங்களுக்கு போகமுடியாம வீட்லயே முடங்கிடுறாங்க. நிறைய பேர் வேலைக்கு போகாம நின்னுடுறாங்க. எனக்கே தெரியும். அழகு என்பது முடியில இல்ல. அது மனசுலதான் இருக்கு. இந்த விசயத்த அவங்களுக்கு புரிய வைக்கிறதுக்காகத்தான் மொட்டையடித்தேன்” எனக் கூறி முடித்து கைத்தட்டல்களைப் பெற்றுக் கொண்டு மறுபடி விக்கை தனது தலையில் மாட்டியபடி அமர்ந்திருந்தார் ஆர்த்தி.

[விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது தெரியுமா?]

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடியை இழந்த பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் தான் நான் மொட்டையடித்தேன் என்று கூறிய ஆர்த்திக்கு, மொட்டைத்தலையுடன் பிக்பாஸ் அரங்கத்தில் சிறிதுநேரம் கூட அமர்ந்திருக்க முடியவில்லை. தனது மொட்டையை விக் வைத்து மறைத்துக்கொள்கிறார். பின் எதற்கு நம்பிக்கையளிக்கிறேன் என்று விளக்கம் கொடுக்கவேண்டும். அதற்கு பதிலாக புற்றுநோயால் பாதித்து முடியிழந்த பெண்கள் வீட்டிற்குள் இனி முடங்க வேண்டாம். நமக்கு விக் இருக்கிறது. வாங்கி அணிந்து கொள்ளுவோம் என்று கூறி தனது விக்கினை எடுத்து காட்டியிருக்கலாம். இந்த மாதிரியான செயல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதை போல இல்லை. அவர்களை வைத்து ஆர்த்தி நல்லகாரியம் செய்கிறேன் என்ற பெயரில் விளம்பரம் தேடுவதை போலத்தான் அமைந்திருக்கிறது.

[பரணி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட ஜூலி #video பாத்தீங்களா!]

[டிஜிட்டல்வாசி : ஓவியா இல்ல! அதனால விவேகம் பாக்கல..]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*