கேரவேனில் சிறை சென்ற ராம் ரஹிம்!

ஹரியானா மாநிலம், பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய ராம் ரஹிம்-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெஹ்தீப் சிங் நேற்று தீர்ப்பளித்தார்.

[இதையும் வாசிங்க: அரசியல் ஆதாயத்துக்காக பற்றி எரிகிறது பஞ்ச்குலா]

பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய ஒரு நபரை காவல்துறையினர் எப்படி நடத்துவார்கள் என்பது நாம் அறிந்த விஷயம். ஆனால் இந்தியாவில் தப்பு செய்தது ஒரு சாமியாராக இருக்கும் பட்சத்தில், அவரை நடத்தும் விதம் மற்றவர்களில் இருந்து வேறுபடுகிறது. பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளி என கடந்த வெள்ளிக் கிழமையன்று உறுதி செய்யப்பட்ட ராம் ரஹிம்-ஐ காவல்துறையினர் பொறுமையாக அமைதி காத்து மரியாதையுடன் அழைத்துச் செல்கின்றனர். அதுவும் ராம் ரஹிம்-ஐ அவருக்கு சொந்தமான சொகுசு வாகனத்தில் செல்ல அனுமதித்திருக்கிறார்கள். இந்த வழக்கினால் ஏற்பட்ட கலவரத்தில், 31 அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பாஜக ஆளும் இந்தியாவில், சாமியாராக இருந்தால் நீங்கள் எந்த ஒரு தவறு செய்தாலும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்ற நிலையே இதன்மூலம் தெரிகிறது. இந்த வீடியோவை Indian Express பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

[யார் இந்த ராம் ரஹிம் சிங்?]

Baba Gurmeet Ram Rahim after conviction

Baba Gurmeet Ram Rahim in police custody soon after his conviction

Posted by Indian Express on Friday, August 25, 2017

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*