மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்?

2013-ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் அறிமுகமான பாலிவுட் திரைப்படம் ‘ராஞ்சனா’. இந்தத் திரைப்படத்துக்காக சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றார் தனுஷ். தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது இந்தத் திரைப்படம். கோலிவுட்டை காட்டிலும் பாலிவுட்டில் இதற்கு நல்ல வரவேற்பு. அதன்பிறகு தனுஷ் பாலிவுட் பக்கம் செல்லவில்லை.

[இதையும் வாசிங்க: இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகர் தனுஷ்]

இந்நிலையில் ஆனந்த் மற்றும் தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது ஷாருக்கானை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கும் ஆனந்த், அதன்பிறகு தனுஷுடன் இணைந்து பணிபுரிய உள்ளார். இதுகுறித்து தனுஷ், “ஆனந்த் அவர்களுக்கு எப்போதும் என் மனதில் இடமுண்டு. ‘ராஞ்சனா’ படப்பிடிப்பு வேலைகளில் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனைப் போல் கவனித்துக் கொண்டார்கள். அவருடன் மீண்டும் பணிபுரிவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

[தனுஷ் பிறந்தநாள்: ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன்]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*