பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவு ஊட்டச்சத்துக்கள் வேண்டுமென்பதால் பெண்கள் தங்கள் உணவில் ஒருசில உணவுப் பொருட்களை தினமும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.

குறிப்பாக வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்த கீரைகள், தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீழே ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை, அஸ்பாரகஸ், வெந்தயக் கீரை, ப்ராக்கோலி போன்ற உணவுப் பொருட்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, போலிக் ஆசிட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. எனவே அன்றாட உணவில் பச்சை இலைக் காய்கறிகளை தவறாமல் பெண்கள் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தானியங்களில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் நிபுணர்களும் கோதுமை பிரட், கோதுமை பாஸ்தா மற்றும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றை பெண்கள் சாப்பிடுவது நல்லது என்று தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமின்றி, இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

பெண்கள் நட்ஸை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில் நட்ஸில் புரோட்டீன், மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. மேலும் நட்ஸ் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும். தினமும் 10-15 பாதாம், முந்திரி போன்றவற்றை சாப்பிடுவது நலம்.

தயிரில் வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே தினமும் தயிரை உணவில் பெண்கள் சேர்ப்பது, எலும்புகளை வலுவாக்கி, கால்சியம் குறைபாட்டை தடுக்கும்.

பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். எனவே பெர்ரிப் பழங்களை பெண்கள் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

இதையும் வாசிங்க : 

[ஆண்களுக்கு சில அழகு குறிப்புகள்!]

[கேரளத்து தேவதைகளின் அழகு ரகசியங்கள்]

[கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மேலும் 61குழந்தைகள் உயிரிழப்பு]

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*