அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பு : மு.க.ஸ்டாலின்

மருத்துவ படிப்பில் சேரமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டுமென்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பை கனவாக மாற்றி வைக்கும் மத்திய அரசின் நீட் தேர்வு தமிழகத்தில் நடந்து அதன்படி மருத்துவ கலந்தாய்வும் நடந்துவிட்டது. நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் சென்ற வழக்கறிஞர் நளினி சிதம்பரத்துக்கு எதிர் மனுதாரராக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வின் அடிப்படையில் நடந்த கலந்தாய்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தற்கொலைக்கு நீட் தேர்வுதான் காரணமென்று அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் சாவுக்கு மத்திய – மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க : நளினி சிதம்பரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றார் ஏழை மாணவி அனிதா

இந்நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மாணவி அனிதாவின் சாவுக்கு திமுக சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது அரசு, அரசாக இல்லை என்பதால் எதையும் எதிர்பார்க்க முடியாது. மாணவி அனிதா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அறிவாலயத்தில் என்னைச் சந்தித்ததார். 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்திருந்தால், மருத்துவ படிப்பில் மாணவி அனிதாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். என்று கூறினார்.

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*