ஜனாதிபதியை சந்திக்கின்றனர் டிடிவி தினகரன் தரப்பினர்?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், இன்று டெல்லி சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாக இணைந்தது.  அவர்கள் இணைந்ததையடுத்து பொது செயலாளர், துணை பொது செயலாளர் பதவியில் இருந்து சசிகலா, தினகரன் நீக்கப்படுவார்கள் என்றும் அதற்காக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் டிடிவி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தார். மேலும் 19 எம்.எல்.ஏக்களும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள் எனவே இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட முடியாது என்று கைவிரித்துவிட்டார். ஆளுநரின் இந்த பதில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி திமுக எம்.பிக்கள் டி.கே.எஸ் இளங்கோவன், கனிமொழி,திருச்சி சிவா மற்றும் கூட்டணி எம்.பிக்களான ஆர்.எஸ்.பாரதி, சீத்தாரம் யெச்சூரி, டி.ராஜா, , ஆனந்த் சர்மா ஆகியோர் ஜனாதிபதி ராம்நாந்த் கோவிந்தை சந்தித்து நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிச்சிட்டு தொடருங்கள் : எம்.எல்.ஏக்களை தக்க வைக்க பழனிசாமி ஆலோசனை!

இவர்களைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், இன்று டெல்லி சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தினகரன் தரப்பினர் டெல்லி சென்றாலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தினகரன் தரப்பினரை சந்திக்க நேரம் ஒதுக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக தினகரன் அணியினரை ராம்நாத் கோவிந்த் சந்தித்தாலும் இவர்களது முறையீட்டை கேட்டுக்கொள்வாரேயொழிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான உத்தரவு அவரிடமிருந்தும் வராது என்றே கருதப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் உதவுவதற்காகத்தான் நாட்டின் அனைத்து முக்கிய பொறுப்புகளிலும் தனது ஆதரவாளர்களையே பாஜக வைத்திருக்கிறது. எனவே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் இல்லாமல் தமிழகத்தில் யார் மூலமும் காலூன்ற முடியாது என்பதை பாஜக தெளிவாக உணர்ந்திருப்பதால் தற்போதைக்கு டிடிவி தினகரன் தரப்பினர் குடியரசுத் தலைவர் என யாரை சென்று சந்தித்தாலும் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பாஜக தலையசைக்காமல் யாரிடமிருந்தும் உத்தரவு வராது என்றே கருதப்படுகிறது. எனவே தற்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து டிடிவி தினகரன் தரப்பினர் குடியரசுத் தலைவரை சென்று சந்திப்பதைகாட்டிலும் மேலும் பல எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் தங்கள் பக்கம் இழுத்து நம்பிக்கை  நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டிய நிர்பந்தத்தை பாஜகவுக்கு ஏற்படுத்தவும் தினகரன் தரப்பினர் மறைமுகமாக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தெரியுமா : இலை இனி இல்லை : ஓபிஎஸ் ஈபிஎஸ் தாமரை சின்னத்தில் போட்டி!

தொடர்புடைய செய்திகள்

அதிமுகவின் இன்றைய நிலைக்கு காரணம் யார் தெரியுமா இங்கே க்ளிக் பண்ணுங்க…!

மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசை காப்பாற்றும் ஆளுநர்

நான்கு லாறிகளில் இலை மீட்பு ஆவணங்களை எடப்பாடி பழனிசாமி யாருக்காக தாக்கல் செய்தார்!

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*