மாணவி வளர்மதி சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம்!

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராடியதால் குண்டாஸ் சட்டத்தில் சிறையிலிருக்கும் மாணவி வளர்மதி சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

இதை ஃபர்ஸ்ட் படிச்சிருங்க : குண்டர் சட்டத்தின் பிடியில் தமிழகம் : உணருமா இயக்கங்கள்? டி.அருள் எழிலன்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுக்கும் திட்டம் போன்ற தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை மத்திய அரசு தமிழக அரசின் துணையோடு நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டங்களுக்கு எதிராக நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ போராடும் மக்கள் மீது வன்முறையையும், ஒடுக்குமுறையையும் பிரயோகப்படுத்தி வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் அப்பக்குதி மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வந்தன. அதன்படி சேலம் மாணவி வளர்மதி நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாகவும், அங்கு செயல்படுத்தப்பட்டு இருக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். இதனையடுத்து அவர் ஒரு மாணவி என்று கூட பாராமல், அவரது எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல் அவர் மீது குண்டாஸ் சட்டத்தை போட்டு கடந்த ஜூன் மாதம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

இதை படிச்சிட்டு தொடருங்கள் : நேற்று திருமுருகன் இன்று வளர்மதி : எதிர்ப்பியங்களுக்கு போதாத காலம்

இதையும் படிச்சிருங்க : மாணவி மீது குண்டாஸ் சரி என்கிறார் முதல்வர்!

இந்நிலையில், நெடுவாசல்,கதிராமங்கலம் உள்ளிட்ட தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகளை அழித்துவரும் திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் கடலூர்,சிதம்பரம் மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களை உடனே கைவிடக்கோரியும், சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களை உளவுத்துறை தொடர்ச்சியாக மிரட்டிவருவதாகவும் காலவரையற்ற உண்ணாவிரதம் ஆரம்பித்திருக்கிறார். மேலும்,  இதற்குக் காரணமான உளவுத்துறை மற்றும் அவர்களுக்கு சட்ட விரோதமான தகவல்களை அளித்துவரும் சிறைத்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்யக்கோரியும் உரிய விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தன்மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை எந்தவித நிபந்தனையுமின்றி உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகளான வாய்தாவுக்கு நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்வதைத் திட்டமிட்டே நிராகரித்து வருவதையும், வெளியே அனுப்பும் கடிதங்களைச் சென்றடையாமல் தடுத்து வருவதையும் கண்டித்தும், வளர்மதி காலவரையற்ற உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

இதை படிங்க : குண்டாஸ் சட்டம் எதிரொலி : பல்கலைக்கழகத்திலிருந்து வளர்மதி இடைநீக்கம்!

 

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*