2.0: ரஜினிக்கு ஒரு ரகசிய பாடல்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ‘2.0’. தற்போது இதன் புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே ரஜினிகாந்த் ‘காலா’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தில் ரகசியமாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

[இதையும் வாசிங்க: ஷங்கரும் பிரம்மாண்டமும்: 2.0 மேக்கிங் வீடியோ]

லைகா நிறுவனம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தற்போது அவர் இசையமைத்த ஒரு பாடலுக்கு 10 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இதில் ரஜினியுடன் 300 நடனக் கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். இந்தப் பாடல் பெரிதும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[எமி ஜாக்சன் கூறிய 2.0 ரகசியம்]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*