அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

இந்தியாவில் பிற வட இந்திய மாநிலங்களோடு ஒப்பிடும் போது வளர்ச்சியடைந்த மாநிலமாக இருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளும் அதிகம், மருத்துவம் பயிலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களும் அதிகம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவர்கள் ஆனதால் மருத்துவதுறை அதன் சேவையளவில் சீரழிந்து போகவில்லை. பாஜக ஆளும் 13 மாநிலங்களும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது தமிழகம்.
ஆனால் தகுதி திறமை எனும் பெயரில் நீட் தேர்வை கொண்டு வந்து கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களும் ஏழைகளும் மருத்துவக் கல்விக்குள் நுழைய முடியாத படி பெரும் சிக்கலை உண்டாக்கி விட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும்.

 
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தகுதியும் திறமையும் இருந்தும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் நுழைய முடியாத நிலையில் இனி மருத்துவக் கல்விக்குள்ளும் அவர்கள் நுழைய முடிஅயத நிலையை உருவாக்கி விட்டார்கள்.

 
இது பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்களை பாதித்துள்ள நிலையில் தகுதியும், தரமும் உரிய மதிப்பெண் இருந்தும் நீட் எனும் அநீதியால் அனிதா என்ற பெரம்பலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இப்போது தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அனிதாவுக்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லாத சமூகம் வெளியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

இது தொடர்பான செய்திகள்

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய திமுக

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

 
ஈழப் போரின் போது முத்துக்குமார் தன்னுடலை புதைக்காமல் ஆயுதமாக்கி போராடுமாறு கோரி தீக்குளித்தார். ஆனால் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் சேர்ந்து முத்துக்குமாரை கொண்டு போய் புதைத்து விட்டார்கள். ஈழப் போராட்டம் தமிழகத்தில் நீர்த்து போக அந்த நடவடிக்கை மிக முக்கியமான விஷயம் எனும் நிலையில், நீட் எனும் நீதியான ஒரு கல்வி அடக்குமுறை தமிழக மக்கள் மீது திணிக்கப்படுகிறது. அதற்கு எதிராக போராடுங்கள் என்ற அடையாளத்துடன் அனிதா தற்கொலை செய்திருக்கிறார்.
அனிதா முத்துக்குமார் போல புதைக்கப்பட்டால் நீட் நம்மை புதைத்து விடும். நம் தலைமுறையில் மருத்துவர்கள் இனி உருவாகும் வாய்ப்பே இல்லாமல் போய் விடும். ஆகவே முத்துக்குமார் விவகாரத்தில் போராடாமல் மழுங்கடிக்கப்பட்டது போல அல்லாமல் அனிதாவின் மரணத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அரசியலாக்கி மக்களை அரசியல் மயப்படுத்தி நீட் எனும் அரக்கனை துரத்துவது ஒன்றே அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*