அனிதா உயிரின் மதிப்பு 7 லட்சமும், அரசு பணியுமா?

நீட் தேர்வு அநீதியால் தான் மருத்துவராக முடியாததை எண்ணி தற்கொலை செய்துகொண்டார் அனிதா. அவரது குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணியும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. மேலும் அவர், மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகள் எடுக்கவேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

[இதையும் வாசிங்க: நீட் அநீதி: மாணவர்களை தற்கொலைக்கு தயார்படுத்தும் தமிழக அரசு]

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்திருக்கிறது நீட் தேர்வு. இதனால் பாதிக்கப்பட்ட அனிதா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மரணத்துக்கு காரணமான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல், 7 லட்சம் பணமும், அரசு பணியும் மட்டும் வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. நீட் தேர்வால் இன்னும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு அரசாங்கத்தால் தன் மக்களுக்கு உரிய கல்வியை பெற்றுத்தர முடியவில்லை என்றால் அப்படி ஒரு அரசாங்கம் இருந்து என்ன பயன்?, நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதே அனிதாவின் மரணத்துக்கு கிடைக்கும் நீதியாகும். அதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏதும் வாய் திறக்கவில்லை.

[இன்னும் எத்தனை அனிதாக்கள் வேண்டும் தமிழக அரசே]

தொடர்புடைய செய்திகள்

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*