என்னுடைய நிறம் காவி அல்ல: கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இரண்டு பிரபலமான நபர்கள் அரசியலுக்கு வருவார்களா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் வேறு யாருமல்ல, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்தான். ரசிகர்களை சந்தித்த ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு பற்றி பேசினார், அதன்பிறகு அவர் திரைப்பட பணிகளில் இறங்கிவிட்டார். ஆனால் கமல், தொடர்ந்து அரசாங்கத்தின் பிழைகளை சாடி வருகிறார்.

[இதையும் வாசிங்க: தமிழன் அணிந்திருப்பது கோமாளிக் குல்லா: கமல்ஹாசன்]

திமுக-வின் அழைப்பை ஏற்று முரசொலி பவள விழாவில் கலந்துகொண்டு கமல் பேசியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த வெள்ளி அன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார் கமல்ஹாசன். இந்த சந்திப்பில் அவர் பாஜக-வில் இணைய மாட்டேன் என்பதை உறுதியாக கூறியிருக்கிறார். இதில் கருப்பு சட்டை அணிந்துவந்த கமல், “நான் சினிமாவில் 40 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். என்னுடைய நிறம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும், அது நிச்சயமாக காவி இல்லை” என்று பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து பினராயி விஜயன், “நான் கேரள முதல்வரான பிறகு முதன்முறையாக கமலை சந்திக்கிறேன். சொந்த விஷயமாகதான் இந்த சந்திப்பு நடந்தது. இதில் நாங்கள் தென்னிந்தியாவின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் விவாதித்தோம்” என்று தெரிவித்தார்.

[இந்தியாவின் சமூக பிரச்சனைகளில் தீவிரம் காட்டும் கமல்]

[திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது: கமல்ஹாசன்]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*