திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம்:தினகரன் அணி பங்கேற்பு!

கனம் செய்யப்படாத மற்றொரு அனிதாவின் குமுறல்

நாளை திமுக ழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தினகரன் அணியினர் பங்கேற்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராக மரணமடைந்த அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். திமுக சார்பில் அனிதா குடும்பத்திற்கு 10 லட்சம் காசோலை வழங்கினார்.

 

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?
அதற்கு முன்னதாகப் பேசிய ஸ்டாலின் இன்னும் சில நாட்கள் பொறுத்திருங்கள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.கவர்னரிடம் கொடுத்த மனுவுக்கும் பதில் இல்லை. ஜனாதிபதியிடம் கொடுத்த மனுவுக்கும் பதில் இல்லை. இப்படியே நாட்கள் கடந்து செல்லும் நிலையில் தமிழக அரசியல் சூழலை கருத்தில் கொண்டு தினகரன் அணியினரின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க திமுக தயாராகி வருகிறது.
மேலும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் பாஜக ஆகியோரிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள திமுக உதவியை தினகரன் அணியினர் நாடியிருக்கிறார்கள். அதற்கு திமுக தரப்பில் இருந்தும் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நீட் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தினகரன் அணி பங்கேற்கும் என திவாகரன் தெரிவித்திருக்கிறார். தினகரன் அணியினர் காலை திமுகவின் கூட்டத்தில் கலந்து கொண்டால் தமிழக அரசியலில் அது முக்கிய திருப்பமாக கருதப்படும்.

இது தொடர்பான செய்திகள்

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய திமுக

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*