அனிதாவை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்:விஷால்

கூலித் தொழிலாளியின் மகளான அரியலூர் அனிதா பிளஸ் டூ தேர்வில் 2000க்கு 1176 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்தார். உயர்சாதியினர் எப்போதும் சொல்லும் தகுதி திறமை இரண்டுமே அனிதாவுக்கு இருந்த நிலையில் நீட் தேர்வால் தன் மருத்துவக் கனவு தகர்ந்து விடும் என்று நினைத்தார்.
சிபிஎஸ்சி மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றம் வரை வாதாடிய நிலையில் அனிதா அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றார். ஆனாலும் ஏழை அனிதாவில் வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. நீட் தேர்வை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது.
இதனால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார்.தமிழகம் முழுக்க கொந்தளிப்பை உருவாக்கிய இந்த மரணம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகர் விஷால்:-
“ வருகிற தேர்தலில் அனிதாவின் மரணம் பிரதான பிரச்சனையாக முன்னிறுத்தப்பட வேண்டும். அனிதாவின் மரணத்தை நினைவில் வைத்து வாக்களிக்க வேண்டும். மருத்துவம் படிக்க முடியாத, பொதுத்தேர்வுக்கு பயிற்சி பெற பணம் இல்லை என மாணவர்கள் கவலை பட வேண்டாம், என்னை தொடர்பு கொள்ளலாம்” என்று கூறினார் விஷால்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*