இடஒதுக்கீட்டுக்கு ஆப்பு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது   69% இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது  என்று  நாகர்கோவிலை சேர்ந்த    திருமால் மங்கள்  என்ற மாணவியின் பெயரில் இந்த மனு போடப்பட்டுள்ளது.

[இதையும் வாசிங்க: குறைந்த மதிப்பெண் பெற்று டாக்டரான கிருஷ்ணசாமி மகளும் போதுமான மதிப்பெண் இருந்தும் இறந்த அனிதாவும்]

தமிழகத்தில் நடைமுறையில் பட்டியல் பிரிவு 18% பழங்குடிகளுக்கு 1% மற்றும் மிகவும் பிற்படுத்த பட்டவர்களுக்கு 20% பிற்படுத்தபட்டவர்களுக்கு 30% விதம் என 69% இட ஒதிக்கிடு தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நடைமுறையில் உள்ளது.

[மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பின்னடைவு (#வீடியோ)]

தமிழகத்திலும் மற்ற மாநிலங்களை போல 50 சதவிததிற்கு உள் தான் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று ஏற்கனவே பல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்திரா சஹானி என்ற  மண்டல் கமிஷன் வழக்கின் தீர்ப்பிற்குப் பின்னர், பொதுவாக 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு இருக்க வேண்டியதில்லை  என்று சொல்லப்பட்டாலும்

தமிழ்நாடு சட்டமன்றம் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றி, அதனை தமிழ்நாடு சட்டமன்றத்தில் எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றியது.

மேலும் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புக்காக 76ஆவது அரசியல் சட்டத்திருத்தமாக நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 257 -A The Tamilnadu Backward Classes. Scheduled castes and scheduled Tribes Reservation of seats in Educational institutions and Appointments or posts in the services under the state Act 1993. Tamilnadu Act 45 of 1994  என்ற தலைப்பில், 9வது அட்டவணை பாதுகாப்போடு குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டு, 1994 முதல் அதிகாரப்பூர்வமாக கடந்த 22 ஆண்டுகள் அமலில் உள்ளது.

[85% இடஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு]

தமிழகம்,  நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா உயிர் பலியை தொடர்ந்து நிலவி வரும் கொந்தளிப்பான சூழலில், தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலை வாய்ப்பை பறிக்கும் அடுத்த திட்டமாக இந்த  வழக்கு  தொடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*