உடலுக்கு கேடு விளைவிக்கும் மோமோஸ்!

தெருவோர கடைகளில் கிடைக்கும் இந்த வட்ட வடிவ பதார்த்ததின் பெயர் தான் மோமோஸ். மைதா மாவு, காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றைக் கொண்டு தயார் செய்வதோ எளிது. ஆனால், உடல்நலத்திற்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.மோமோஸ் சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவைக் கொண்டு தயார் செய்யப்பட்டாலும், அந்த மாவில் அசோடி கார்போனமைடு, குளோரின் வாயு, பென்சோயில் பெராக்சைடு உள்பட மற்ற ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டுள்ளதால் நம் உடலில் கணையம் மற்றும் நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.

விலை குறைந்த மோமோஸ்களை தயாரிப்பதற்காக ஏற்கனவே இறந்த விலங்குகள் அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் இறைச்சியை சாலையோர கடைக்காரர்கள் பயன்படுத்துகின்றனர். கழுவப்படாத காய்கறிகள் அவசர, அவசரமாக வேக வைக்காமல் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. இந்த கழுவப்படாத காய்கறிகளில் இருக்கும், ஈ-கோளை போன்ற பாக்டீரியாவால் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடும். மோமோஸ் தயாரிக்கும் காய்கறிகளில் முட்டைக்கோஸூம் சேர்க்கப்படுகின்றது. இது சரியாக வேகவைக்கப்படாததால், மூளைக்கு சென்று அடையக்கூடிய நாடாளுப்புழு வளர்வதற்கு காரணமாக அமைகின்றது.

மோமோஸ்வுக்கு கூடுதலாக சிவப்பு மிளகாய் சட்னியும் கொடுக்கப்படுகின்றது. சிவப்பு மிளகாய் உடலுக்கு நல்லது என்றாலும் கூட, ஓரளவுக்கு அதிகமான காரத்தால் நம் உடலில் இரத்தப்போக்கு அல்லது பைல்ஸ் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.

உடல் பருமனை அதிகரிக்கக்கூடிய மோனோ சோடியம் குளூட்டமேட் மோமோஸ்வில் இருப்பதால் நரம்பு மண்டலம், அதிகளவில் வியர்த்தல், மாரடைப்பு, குமட்டல் மற்றும் படபடப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றின் ஆராய்ச்சி படி மோமோஸ் போன்றவற்றை சாப்பிடும் போது நம் உடலில் நுண்கிருமி ஏற்படுகின்றது எனத் தெரியவந்துள்ளது. நாய்களின் இறைச்சிக்கொண்டும் மோமோஸ் தயார் செய்யப்படுவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறு இருக்கும் வேளையிக், கடைகள் சுத்தமாக இருப்பதால் நாம் அதனை நம்பி சாப்பிட்டுவிடுகின்றோம். ஆனால், அதன் தரம் பற்றி நாம் அறிந்துகொள்வதில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*