“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

அவசியம் வாசிங்க:-தகனம் செய்யப்படாத மற்றொரு அனிதா எழுதுவது!

தகுதியும் திறமையும் இருந்தும் கூட ஏழை கூலித் தொழிலாளியின் மகளான அனிதாவால் மருத்துவக் கல்விக்குள் நுழைய முடியவில்லை.ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஏழைகளோ தாழ்த்தப்பட்டவர்களோ நுழைய முடியாதபடி செய்தது போல மருத்துவக் கல்விக்குள்ளும் ஏழைகள் கிராமப்புற மாணவர்கள் நுழைய முடியாதபடி நீட் எனும் அநீதியான தேர்வு முறையை புகுத்தியது மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?
அவரது மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அதை குலைக்கும் வகையில் தமிழக அரசு நீட்டுக்கு ஆதர்வான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் நிதி உதவியும் கல்வி தகுதிக்கு ஏற்ப ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.இந்த தொகைக்கான வரைவோலையுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா இன்று அனிதாவின் வீட்டிற்குச் சென்றார்.
ஆனால் அந்த வரைவோலையை பெற்றுக் கொள்ள அனிதா குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பல மணி நேரம் பேசியும் அனிதாவின் குடும்பத்தினர் அந்த நிதி உதவியை பெற மறுத்து விட்டனர். நீட் தேர்வு தொடர்பாக சாதகமான முடிவை அரசு அறிவிக்கட்டும் அதன் பின்னர் இந்த தொகையை பெற்றுக் கொள்வதாக திருப்பி அனுப்பினார்கள்.இது தொடர்பாக பேசிய அனிதாவின் சகோதரர் மணிரத்னம்:-
“அரசின் நிதியை ஏற்றுக் கொள்வது நீட் தேர்வை ஏற்றுக் கொள்வது போலாகி விடும். என் தங்கையின் உயிர்தியாகத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. அவர் எந்த நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டாரோ அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். இதில் உறுதியாக உள்ளோம்” என்றார்.
ஏழ்மையை ஒழிக்கிறோம் என்று ஏழைகளை ஒழித்துக் கட்டும் ஆட்சியாளர்களால் அனிதா வீட்டின் ஏழ்மையை விலை பேச முடியவில்லை. ஆனால் அதே நேரம் அரசின் நிதி உதவியை மறுத்த அனிதாவின் குடும்பம் திமுக கொடுத்த 10 லட்சத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் அனிதாவின் குடும்பத்தினர் மக்களுக்கு மிகத் தெளிவான செய்தியை கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பான செய்திகள்

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய திமுக

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*