நீட் துவக்க விழா எதிர்ப்பு: நிகழ்ச்சியை ரத்து செய்து ஓடிய விஜய பாஸ்கர்

அனிதாவின் இறப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மத்திய மாநில அரசுகளுக்கு  எதிராக  மிகப் பெரிய போராட்டங்கள் தன்னிச்சையாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் சட்டம், பொறியியல், கலை, மருத்துவம் என அனைத்து தரப்பு மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து சாலை மறியல், ரயில் மறியல், மனிதச் சங்கிலி என வீரியமான போராட்டங்களை நடத்தி கொண்டிக்ருகிறார்கள்.

[இதையும் வாசிங்க: டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவேல் பேரவையினர்]

இந்நிலையில் நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் மருத்துவ இருக்கைகள் பெற்றவர்களுக்கான முதல் வகுப்பு துவக்க விழா  இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் கலந்து கொள்வதாக பத்திரிக்கை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வரவேற்பு பதாகைகள் வைக்கப்ட்டிருந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற இருந்த புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுரியை பொதுமக்களும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும் முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். மருத்துவமனை கலையரங்கத்தின் முன் கூடி இருந்தவர்களை காவல்துறை கைது செய்த பின்னும் அடுத்தடுத்து பல்வேறு குழுக்களாக பொதுமக்கள் வந்துகொண்டே  இருந்ததால் அமைச்சர்  நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுரி புதிதாக  துவங்கப்பட்டு இந்த ஆண்டுதான் வகுப்புகள் துவங்கியுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

[மாணவர்கள் போராட்டம்: புதுச்சேரி கவர்னர் மாளிகை மூடப்பட்டது #வீடியோ]

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய திமுக

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*