“அயோக்கிய பயலுகளா” கொந்தளித்து தீர்த்த அமீர்…! VIDEO

மருத்துவ படிப்பில் சேர அத்துனை தகுதிகள் இருந்தும், நீட் தேர்வால் படிக்க முடியாமல் போன அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவரது இறப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களும், பொது மக்களும், பல்வேறு இயக்கங்களும் நீட் தேர்வை நீக்கச் சொல்லி போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

அனிதா மரணம் குறித்து கேள்வி எழுப்பி இயக்குனர் அமீர் ஆவேசத்துடனும் அழுகையுடனும் பேசியிருக்கிறார். அதில் அவர், “ முன்பெல்லாம் 12 வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள்தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தித்தாள்களில் படிப்போம். ஆனால் முதல்முறையாக மாநில அளவில் மதிப்பெண் பெற்ற பெண் தற்கொலை செய்திருக்கிறாள். இதுதான் உங்கள் புதிய இந்தியாவா?.. நீட் தேர்வுக்கு அனுமதியளித்த அயோக்கிய அரசியல்வாதிகள் வெக்கி சாக வேண்டும்” என்று பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*