அவர்கள் நீட் கொண்டுவந்ததே நாம் கோட்டு போட கூடாதென்றுதான்- ஷாலின் மரியா லாரன்ஸ்

அடிமைகள் தோளோடு தோல் உரசி நடப்பது யாருக்கு பிடிக்கும் ?

யாரை அவர்கள் அடிமையாகவே வைத்திருக்க நினைத்தார்களோ அவன் கோட்டும் சூட்டும் போட்டு கால் மேல் கால் போடுவான் என்று அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை . யாரை அவர்கள் மனிதனாக கூட நடத்தவில்லையோ அவன் அவர்களின் அரசியல் சாசனத்தின் தந்தையாவான் என்று அவர்கள் நினைக்கவில்லை . அவர்களின் அரசியல் சாசனத்தை அவன் கையாலே இயற்றுவான் என்று அவர்கள் நினைக்கவில்லை .
இதையெல்லாம் அவனுக்கு கொடுத்தது கல்வி .

ஆம் ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த அண்ணல் அம்பேத்கரை “The father of the Indian constitution ” ஆக்கியது அவர் பெற்ற கல்வி .

அடிமைகள் ஜெயிப்பது யாருக்கு பிடிக்கும் ?

தமிழ்நாட்டில் சூத்திரன் என்று இவர்களால் அழைக்கப்பட்ட ஒருவன் இட ஒதுக்கீடு கேட்கிறான் அதை சட்டமாக்குகிறான் .
தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக மலம் அள்ளி கொண்டிருந்தவர்கள் ,பனை மரம் ஏறி கொண்டிருந்தவர்கள் அதை பயன்படுத்தி கல்வி பெறுகிறார்கள் ,பகுத்தறிவு பெறுகிறார்கள் . அரசு முக்கிய பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள் .அடிமைகள் ஜெயிக்கிறார்கள் .
ஜெயித்தவர்கள் அந்த மாநிலத்தில் பலவருடங்களுக்கு இவர்களின் காவி கோடி ஏறாமல் பார்த்துக்கொள்கிறார்கள் .
இன்றுவரை அவர்கள் தமிழ்நாட்டில் கொடியேற்றாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியாரும் ,அவரின் திராவிட கொள்கைகளும் ,இட ஒதுக்கீடும்தான் .

மேல் சொன்ன இரண்டு காரணங்கள் தான் அவர்கள் நீட்டய் இங்கே வலுக்கட்டாயமாக கொண்டு வரக்காரணம் .பல உயிர்களையும் அவர்களின் கனவுகளையும் பலி கொடுக்க காரணம் .ஆம் அழுத்தி சொல்லுகிறேன் ,திரும்ப திரும்ப …”குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவம்தான் நீட்”

அனிதா ஏன் கடிதம் எழுதி வைக்காமல் இறந்து போனாள் தெரியுமா ?

இந்த புதிரை ,உன்னை சுற்றி இருக்கும் இந்த சிலந்தி வலையை ,உன் அறிவை கொண்டு நீ கட்டவிழ்க்கவேண்டும் என்றே ஒரே நோக்கத்தில்தான் . அவள் எழுதி வைக்காத ஒரு கடிதம் ,இன்று பல கடிதங்களை ,ஆய்வுகளை வெளியே கொண்டுவந்திருக்கிறது .

அவள் எழுதி வைக்காத கடிதம் ,இன்று பலரின் ஜாதி வெறியை ,தான்தான் உயர்ந்தவன் என்கிற மமதையை வெளிகொணர்திருக்கிறது .

ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது ,அவர்கள் வருத்தப்படவில்லை .மாறாக வெறுப்பை உமிழ்கிறார்கள் ,கேலியும் கிண்டலுமாய் உன்னை பார்த்து கேட்கிறார்கள் “தரம் இல்லாத நாய்கள் நீங்கள் ” “உங்களுக்கு தரம் இல்லை ” .

தரம் ,தரம் ,தரம் என்று நொடிக்கு ஒரு தடவை அவர்கள் உன்னை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லி உன்னை நோகடிக்கிறார்கள் .ஆமாம் அவர்கள் உயர்ந்தவர்கள்தான்!!

அவர்களை உயர்ந்தவர்களாக உலகிற்கு காட்டியது மனுதர்மம் என்கிற ஒரு அதர்ம நூல் ,ஆனால் அவனை தொடர்ந்து உயர்ந்தவனாக வைத்திருப்பது நீதான் !!!!!

அவனை “சாமி ” என்று நீ அழைக்கும் வரை அவன் உயர்ந்தவன்தான் .

கைகட்டி அவன் முன் நீ நிற்கும் வரை அவன் உயர்ந்தவன்தான் .

உன் திருமணத்தை அவன் நடத்தி வைக்கும் வரை ,அவன் உயர்ந்தவன்தான் .

நீ உழைத்து சாம்பாதித்த எந்த ஒரு பொருளையும் அவன் தொட்டு மந்திரித்து கொடுத்துக்கொண்டிருக்கும் வரை அவன் உயர்ந்தவன்தான் .

திராவிட கட்சி தலைவர்களின் வீட்டு பெண்கள் மாட்டுக்கு பூஜை செய்து கொண்டு ,அவர்கள் கையால் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் வரையில் அவர்கள் உயர்ந்தவர்கள்தான் .

நீ எந்த நேரத்தில் கலவி கொள்ள வேண்டும் ,உன் குழந்தை எந்த நேரத்தில் பிறக்கவேண்டும் ,அதற்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று அவன் கணித்து கொடுத்துக்கொண்டிருக்கும் வரை அவன் உயர்ந்தவன்தான் .

நீ நடத்தும் சமூகநீதி மாநாடு வெற்றி பெற அவனை வைத்து ஹோமம் வளர்க்கும் வரை அவன் உயர்ந்தவன்தான் .

இந்த தமிழ்நாட்டிலே நமக்குள் நூறு சாதி பிரிவினைகளை வைத்து கொண்டு நான் உயர்ந்தவன் ,நீ தாழ்ந்தவன் என்று என்ன சண்டை போட்டு கொண்டிருந்தாலும் .அவர்களை பொறுத்தவரை நாம் அனைவருமே தலித்துகள்தான்.புரிந்துகொள் …திராவிடர்கள் அனைவரையுமே அவர்கள் அடிமையாகதான் பார்க்கிறார்கள் . அந்த அடிமைகள் டாக்டருக்கு படித்து அவர்களை தொட்டு வைத்தியம் பார்ப்பது அவர்களால் எப்படி தாங்கி கொள்ள முடியும் ? ஆகவே இந்த நீட் .

இது மட்டுமல்ல இன்னும் பல படிப்புகளுக்கு இன்னும் பல நுழைவு தேர்வுகள் வரலாம் ,இட ஒதுக்கீட்டை நம்மிடமிருந்து மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் மாபாத சூழ்ச்சியில் அவர்கள் ஈடுபடலாம் .

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அவன் உயர்ந்தவன் என்று அவன் நினைப்பும் ,அவனை எல்லாவற்றிலும் தூக்கி வைத்திருக்கும் உன் முட்டாள்தனமே காரணம் .

அவர்களின் மமதையை ,அகந்தையை உடைப்பதற்கு ஒரே ஆயுதம்தான் .பகுத்தறிவு .

படித்து டாக்டர்களாக வேண்டிய இந்த தமிழ் மக்கள் இப்பொழுது நோயாளியாய் இருக்கிறாரகள் .

இந்த மாநிலத்தின் தற்போதைய தேவை .வைட்டமின் B2 .

ஆமாம் ,அம்பேத்கரின் blue வும் ,பெரியாரின் black கும் தான் நமக்கு இப்போதைய அவசர தேவை .

அவர்களை புறக்கணிப்போம் ,அவர்கள் சம்பாதிக்க நோகாமல் நோம்பு கும்பிட வழிவகை செய்யும் அவர்களின் கோவில்களை புறக்கணிப்போம் .

அவர்களின் கடவுள்களை மறப்போம் .உன் கடவுளை ,நீ பூஜை செய் ,நீ வழிபடு ,அவர்கள் எதற்கு ?

அவர்களின் சாங்கிய சம்பிரதாயங்கள் நமக்கு வேண்டாம் .

உன் திருமணங்களை ,நீயே நடத்தி கொள் ,உன் நற்காரியங்களை சான்றோர்களையும் ,கற்றவர்களும் வைத்து நடந்து .

வேதம் ஒதுக்கி வை .

அவர்கள் எதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்களா ,அது அவர்களுக்கு இல்லாமல் செய் .

அவன் “சாமி ” இல்லை ஆசாமி என்று அவன் புத்தியில் ஓங்கி அறை விடு .

ஆதிச்சநல்லூரை போல் ,கீழடியை போல் ,திராவிடத்தை புதைக்க பார்க்கிறார்கள் .

உன் மரபு எது ,உன் உண்மை பண்பாடு எது என்று கீழடியில் தேடி பார் . உன் புனிதயாத்திரைகள் யாவும் இனி கீழடி நோக்கி இருக்க வேண்டும் . கீழடியை மீட்பது நம் கடமை .திராவிடத்தை தக்க வைப்பது நம் கடமை .

நமக்கு சம்பந்தமே இல்லாத ராமனையும் ,க்ரிஷ்ணனையும் மற,உனக்காக போராடிய அம்பேத்கரையும் ,பெரியாரையும் வீட்டில் வை .சுயமரியாதை எண்ணம் கொள் .

சினம் கொள் ,போராடு ,புரட்சி செய் !!!!!

ஷாலின் – சமூக வலைதள பதிவர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*